சாப்பாட்டுக்கே வழியில்லை: வங்கிக்கணக்கை திறக்க உத்தரவிடுங்கள்: மதன் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனு
பப்ஜி மதன் மனைவி கிருத்திகா வழக்கு தொடுத்துள்ளார்
சென்னை: தனக்கு சாப்பாட்டுக்குகூட வழியில்லை என்றும், வாழ்வாதாரமே சிரமமாக உள்ளதால், தன்னுடைய வங்கி கணக்கை திறக்க வேண்டும் என்றும் கோரி, பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்தவர் மதன்.. இந்த பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி நிறைய பண மோசடிகளிலும் ஈடுபட்டு வந்தார்.. இதையடுத்து, மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதன், கிருத்திகா மீதான குற்றப் பத்திரிகையை சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தாக்கல் செய்திருந்தனர்..

சாட்சியங்கள்
மொத்தம் 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்லாமல், 150-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், வெறும் 32 பேர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டிருந்தது...

புகார்கள்
மதன் மீது நிறைய புகார்கள் இருந்தாலும், கொரோனா காலத்தில் உதவி செய்வதாக சொல்லி ரூ.2 கோடியே 89 லட்சம் பண மோசடி செய்துள்ளதுதான் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.. கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேரை ஏமாற்றி இப்படி பணம் பறித்துள்ளாராம்.. அதேபோல, மதனின் மனைவி கிருத்திகாவை 2-வது குற்றவாளியாக இந்த வழக்கில் போலீஸார் சேர்த்தனர்.

கிருத்திகா
கிருத்திகா தற்போது ஜாமீனில் உள்ளார்.. ஆனால், மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.. தொடர்ந்து சிறையில் உள்ளார்.. விடுதலையான கிருத்திகா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களையும் ஒருநாள் சந்தித்தார்.. அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் சொத்துக்கள் எதுவும் வாங்கவில்லை என்றும், சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை என்றும், அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள், ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

சேனல் முடக்கம்
வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாகவும், தங்களது யூடியூப் சேனலை முடக்கிவிட்டதாலும், டெபிட் கார்டு, வங்கி கணக்கு, வீட்டின் சாவி எல்லாம் போலீஸாரிடம்தான் இருப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, தான் பப்ஜி கேம் விளையாடவே இல்லை, மதனுடன் லைவ் சாட்டிங்களில் பேசியதில்லை.. லைவ்வில் பேசியதில்லை.. எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் இதுவரை புகாரளிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.

வங்கிக்கணக்கு
இந்நிலையில், தன்னுடைய வங்கிக்கணக்கை திறக்க உத்தரவிடக்கோரி, கிருத்திகா சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.. கிருத்திகாவின் வங்கி கணக்கை ஏற்கனவே போலீசார் முடக்கம் செய்திருந்தனர்.. அந்த வங்கி கணக்கில் 3 கோடி ரூபாய் மோசடி பணம் இருந்ததாக கூறப்பட்டது.. மிக குறுகிய காலத்தில் அந்த 3 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலைதான் குற்றப்பத்திரிகையிலும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

மனு
ஆனால், கிருத்திகாவோ, தனக்கு சாப்பாட்டுக்குகூட வழியில்லை, வாழ்வாதாரமே சிரமமாக உள்ளதால், தன்னுடைய வங்கி கணக்கை திறக்க வேண்டும் என்றும், அதற்கான உத்தரவை சைதாப்பேட்டை வங்கிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. கிருத்திகாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அது தொடர்பான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி, சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications