Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 ஆயிரம் கிலோமீட்டர்தான்.. பஸ்ஸே போகுது! பைக்கில் லண்டன் செல்ல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஆயத்தம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக்கிலேயே லண்டனுக்கு போக முடிவு செய்திருக்கிறோம் என பிரபல டிராவல் விலாகரான டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Who Is TTF Vasan? | TTF Vasan-க்கு Police கொடுத்த Warning | TTF Fans Meet *TamilNadu

    சமூகவலைதளங்களில் சமையல் செய்தும், நசென்னை: பைக்கிலேயே லண்டனுக்கு போக முடிவு செய்திருக்கிறோம் என பிரபல டிராவல் விலாகரான டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார். டனம் ஆடியும், பாட்டு பாடியும், ரிவ்யூ கொடுத்தும் பல கோடிக்களை சம்பாதித்து வருகிறார்கள். இதை சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமில்லாமல் சாமானிய பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் இதை செய்து வருகிறார்கள்.

    ஒரு யூடியூப் சேனல் போதும், நல்ல கன்டென்ட் போதும் வீட்டிலிருந்தபடியே பிரபலமாகலாம். ஆனால் உழைப்பு நிச்சயம் முதலீடாக போட வேண்டும். அந்த வகையில் இளசுகளின் மனங்களை யூடியூப் மூலம் கவர்ந்தவர் டிடிஎஃப் வாசன்.

    யூடியூப்

    யூடியூப்

    கோவையை சேர்ந்தவர் வாசன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு Twin Throttlers you tube சேனலை தொடங்கிய போது அவரின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதையடுத்து சில மாதங்களிலேயே அவரது சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. அதிக அளவில் ரசிகர்கள் கொண்ட டிராவல் விலாகர் என்ற பெயரும் வாசனுக்கு கிடைத்துவிட்டது.

     கோவை டூ லடாக்

    கோவை டூ லடாக்

    இவர் கோவையிலிருந்து லடாக் வரை பைக்கிலேயே சென்ற வீடியோ வைரலானது. அண்மையில் அதாவது கடந்த ஜூன் 29 ஆம் தேதி இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இவரை காண மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. யாரோ நடிகை வந்திருக்கிறார்கள் என்றுகூட அவ்வழியே சென்றவர்கள் நினைத்தனர். ஆனால் டிடிஎஃப் வாசனுக்கு இத்தனை கூட்டமா என அசந்து போயினர்.

     ரூ 50 லட்சம் ஆகும்

    ரூ 50 லட்சம் ஆகும்

    இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் அண்மையில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் "பைக்கிலேயே லண்டனுக்கு போக முடிவு செய்துள்ளோம். இதற்கு ரூ 50 லட்சம் வரை செலவாகும். இதற்கு ஸ்பான்சர் இருந்தால் நன்றாக இருக்கும். பணம் கூட ரெடி செய்து விடலாம். ஆனால் லண்டனுக்கு விசா உள்ளிட்ட பிரச்சினைகளை ஸ்பான்ஸர்களால் சரி செய்ய முடியும். எனவே அவர்கள் ஒத்துழைத்தால் ஒரு புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவோம்.

    பேஸ்புக்

    பேஸ்புக்

    பேஸ்புக்கில் சில ஊடகங்களின் செய்திகளை பார்த்து கொண்டிருந்த போது டெல்லியிலிருந்து லண்டனுக்கு பஸ் போகிறது என்பதை கண்டேன். பஸ்ஸே போகும் போது டூவீலர் ஏன் போகக் கூடாது என யோசித்தேன் என்றார். டெல்லியிலிருந்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லண்டனுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இதற்கு ஆகும் செலவு ரூ 15 லட்சம் ஆகும். இந்த 15 லட்சத்தில் பேருந்து கட்டணம், முழு சேவைகள், விசா, தங்குமிடம் அனைத்தும் அடங்கும். இந்த டெல்லி டூ லண்டன் டூ டெல்லி சென்று வர 70 நாட்கள் ஆகும். வெளிநாட்டுக்கு பேருந்து மூலம் பயணம் செய்வது என்பது 46 ஆண்டுகளில் இரண்டாவது முறையாகும். முதல் முறையாக கொல்கத்தாவில் இருந்து டெல்லி வழியாக லண்டனுக்கு 1957 ஆம் ஆண்டு பேருந்து சேவை இயக்கப்பட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+