‛‛அண்ணா, பெரியார் கிட்ட விருது வாங்குன நீ.. இந்தி கத்துகிட்டு பொழப்பு நடத்தணுமா''.. பராசக்தி டிரெய்லரில் ‛பஞ்ச்'
சென்னை: ‛‛அண்ணா, பெரியார் கிட்ட விருது வாங்கின நீ, இந்து கத்துகிட்டு பொழப்பு நடத்தணுமா.. டெல்லி தான் இந்தியாவா? செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு'' என்று நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ‛பராசக்தி' திரைப்படத்தின் டிரெய்லரில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் சிவகார்த்தியேன், ரவி மோகன், அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‛பராசக்தி'. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். மறைந்த முதல்வர் அண்ணா கதாபாத்திரத்தில் நடிகர் சேத்தன் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழகத்தில் 1964ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த டிரெய்லரின்படி பார்த்தால் சிவகார்த்திகேயன் ரயிலில் பணி செய்கிறார். அவருக்கு சகோதரராக அதர்வா நடித்துள்ளார். ரவி மோகன் வில்லனாக மிரட்டுகிறார். டிரெய்லரின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடன் பணியாற்றும் நபர் இந்தியில் பேச சொல்லும்போது, ‛‛இந்த மதராஸி டெல்லி போனால் இந்தியில் பேசுவான். அதேவேளையில் இந்தி பேசும் நபர் மதுரைக்கு வந்தால் கண்டிப்பாக தமிழ் தான் பேச வேண்டும்'' என்று கூறும் வசனம் உள்ளது.
அதேபோல், நாடு முழுவதும் இந்தி மொழியை அதிகார்ப்பூர்வமாக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளது என்ற வசனம் வருகிறது. அதேபோல் அதர்வா, தனது அண்ணன் சிவகார்த்திகேயனை, ‛‛இந்தியை திணிக்கும் மத்திய சர்க்காருக்கு அடிமை வேலை பார்த்து நல்ல சம்பாதிக்கிறானே'' என்று சொல்வது இடம் பெற்றுள்ளது.
மேலும், ‛‛அண்ணா, பெரியார் கிட்ட விருது வாங்குன நீ.. இந் பிள்ளைகிட்ட இந்தி கத்துகிட்டு பொழப்பு நடத்தணுமா.. டெல்லி தான் இந்தியாவா?.. இந்த நெருப்பு பரவும்.. பரவட்டும்.. சேனை ஒன்று தேவை.. '' என்ற டயலாக்குகள் தெறிக்க விடுகின்றன. மேலும் ‛‛நாங்கள் இந்திக்கோ, இந்திக்காரர்களுக்கோ எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்புக்கு தான் எதிரானவர்கள்’’ என்ற டயலாக் உள்ளது.
அதேபோல் போராட்டம் தொடர்பாக ஒருவர் அண்ணாவிடம், அண்ணா இதன் பின்னணியில் நீங்கள் தான் இருக்கிறீர்களா? என்று கேட்க அவர் நான் இல்லை.. ஆனால் இதை பண்ணுனவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி என்று சொல்வதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இறுதியாக சிவகார்த்திகேயன் பேசும், ‛‛ செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு'' என்பதுடன் டிரெய்லர் முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications