ஆம்னி பஸ்களில் ஆணுறைகள், மதுபாட்டிகள்.. அத்துமீறுவது இளம் ஜோடிகள் மட்டுமல்ல.. இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: ஆம்னி பேருந்துகளில் உள்ள படுக்கை வசதி இருக்கைகள் மிக வேகமாக நிரம்பி விடுகின்றன. இதன் பின்னணியில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீஸ் கெடுபிடிகளுக்கு பயந்து ஆம்னி பஸ்களை நடமாடும் ' விடுதி' போன்று பயன்படுத்தி விபச்சார கும்பல்கள் அழகிகளுடன் உல்லாசம் அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காதலர்களும் தங்கள் காதலியுடன் ஜாலியாக இருக்க ஆம்னி பஸ்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆம்னி பேருந்துகள் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு மக்களுக்கு வரமாக உள்ளன. குடும்பத்துடன் பேருந்தில் உறங்கியபடி பயணிக்க ஆம்னி பேருந்துகள் தான் மிகப்பெரிய சாய்ஸ் ஆக உள்ளது. என்னதான் ரயில்களில் படுக்கை வசதிகள் இருந்தாலும், பலர் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். நடுத்தர வர்க்கத்தினரை பொறுத்தவரை ரயிலில் செல்வதையே விரும்பினாலும், ரயிலில் டிக்கெட் உடனே கிடைப்பது இல்லை.. இதனால் அவர்கள் ஆம்னி பேருந்துகளை விரும்புகிறார்கள்.

ஆம்னி பேருந்துகளில சாய்ந்தபடி பயணம் செய்யும் 'புஷ்பேக்' இருக்கைகள், குளுகுளு வசதியுடன் இருக்கைகள், குளுகுளு வசதியுடன் படுக்கை வசதிகள், குடிநீர், போர்வை, சிறிய டி.வி. உள்ளிட்ட பல வசதிகள் வந்தன. தற்போதெல்லாம் கழிப்பறை வசதிகளும் பேருந்துகளில் வந்துவிட்டது. ஹோட்டல்களை போன்று மிக உயர்தரமான வசதிகளுடன் ஆம்னி பேருந்துகள் அதிகரித்து விட்டது. இதனால் அந்த ஆம்னி பேருந்துகள் தான் இன்றைய இளைஞர்களின் முதல் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் உள்ள படுக்கை வசதி பெட்டிகளில் இளம் ஜோடிகள் சிலர் எல்லை மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது வெளியே வரும். ஆனால் இதனை பெரிய ஆம்னி பேருந்து பணியாளர்கள் குறையாக கூறியது இல்லை.. அதேநேரம் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டால் மட்டுமே கண்டிப்பார்கள்.. அதுவும் வெளியே வந்ததும் இல்லை.. இந்நிலையில் ஆம்னி பஸ்களின் படுக்கை வசதிகளை தங்களது உல்லாசத்துக்கான வசதியாக சிலர் பயன்படுத்த தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் அழகிகளுடன் அறை எடுத்து தங்கினால் போலீஸ் கண்டுபிடித்து ரெய்டு நடத்தி கைது செய்துவிடுகிறது.. இளம் ஜோடிகள் மற்றும் காதலர்களும் தங்களது இரவு நேர தனிமைக்கு இதுபோன்ற படுக்கை வசதிகொண்ட ஆம்னி பஸ்களை தேர்வு செய்வதாக ஆம்னி பேருந்து பணியாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.. படுக்கை வசதிகள் கொண்ட பஸ்களில் ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி திரைச் சீலைகள் கொண்டு மூடப்பட்டு இருக்கும் என்பதுடன் யாரும் அதனை விலக்கி பார்க்க மாட்டார்கள் என்பதால், இதனை விரும்புகிறார்களாம்..
பயணிகளை இறக்கி விட்ட பின்னர், பஸ்சை சுத்தம் செய்ய பார்க்கும் போது, ஆணுறை, மதுபாட்டில்கள் இருக்குமாம் படுக்கை விரிப்பும் அலங்கோலமாகி இருக்குமாம். இதனால் ஆம்னி பஸ்களை சுத்தம் செய்யவே மனம் ஒப்பாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்களாம் பணியாளர்கள். ஆம்னி பஸ்களில் பலர் ஜோடிகளாக பயணிக்கும் நிலையில், சிலரது தவறான செயலால் பலருக்கும் சங்கடத்தை தருகிறது.
ஆம்னி பஸ்களில் இரட்டை படுக்கை வசதி இருக்கைகளில் திரைகளை அகற்றலாம் என்று பணியாளர்கள் நினைத்தாலும், பெண் பயணிகளுக்கு அசவுகரியம் ஏற்படும் என்பதால், ஒன்றும் செய்ய முடியாத நிலையே இருக்கிறது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்!












Click it and Unblock the Notifications