சுரேந்தரை உயிரா காதலிச்சேன்.. இப்படி அரிவாளால் வெட்டுவார்னு நினைக்கல.. தேன்மொழி வாக்குமூலம்
வெட்டுப்பட்ட இளம்பெண் டாக்டர்களிடம் வாக்குமூலம் தந்துள்ளார்
Recommended Video
சென்னை: "என் வீட்டு நிலைமையை எவ்வளவோ எடுத்து சொல்லியும், சுரேந்தர் கேட்கலை... இப்படி அரிவாளை எடுத்து வெட்டுவார்னும் நான் நினைக்கல" என்று காதலனால் அரிவாள் வெட்டு பட்ட காதலி தேன்மொழி வாக்குமூலம் தந்துள்ளார்.
சேத்துபட்டு ரயில்வே ஸ்டேஷனில் நிறைய பயணிகள் வழக்கம்போல காத்திருந்தனர். அப்போது, ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண் ஒருவரை திடீரென அரிவாளால் தாக்கிவிட்டு இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றார்.
கொஞ்ச நேரத்தில், எலக்ட்ரிக் ரயிலின் முன்பு இளைஞர் பாய்ந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியானார்கள். படுகாயமடைந்த இருவரையும் ரயில்வே போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஈரோடு
இவர்கள் இருவரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்பதும், இருவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் முதல்கட்டமாக தெரியவந்தது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒரு தலைகாதலால் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்தது

வாக்குமூலம்
தேன்மொழி நேற்று ராத்திரி 10.30 மணிக்கு கண் விழித்தார். டாக்டர்கள் அவரிடம் என்ன ஏதென்று விசாரித்தனர். அப்போது தேன்மொழி சொன்னதாவது: "அவர் பெயர் சுரேந்தர். 3 வருஷமா காதலித்தோம். ஆனா நாங்க வேற வேற சாதியை சேர்ந்தவர்கள். வீட்டுல விஷயம் தெரிந்துவிட்டது. ரொம்பவும் எதிர்த்தாங்க. ஆனாலும் நாங்கள் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சோம். அதுக்கு என் வீட்டில் கோபப்பட்டார்கள்.

ரயில்வே ஸ்டேஷன்
சுரேந்தருக்கு கட்டித்தரவே மாட்டோம்னு சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லை.. சுரேந்தரை நான் பாக்கவும் கூடாது, பேசவும்கூடாதுன்னு கண்டிஷன் போட்டுட்டாங்க. அதனாலதான் அவர்கிட்ட பேசுறதை நிறுத்திட்டேன். இதுக்கு நடுவுல எனக்கு வேலை கிடைச்சதால, நான் சென்னைக்கு வந்துட்டேன். ஆனா சுரேந்தர் என்னை விடவே இல்லை. எப்படியாவது என்கிட்ட பேசணும்னு முயற்சி பண்ணிட்டே இருந்தார். நேரில் பார்த்து ஒருமுறை என் நிலைமையை எடுத்து சொல்லலாம்னுதான் சேத்துப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் போனேன். அங்க ரெண்டு பேரும் பேசினோம்.

வாக்குவாதம்
வீட்டில் நடக்கிற பிரச்சனையை எடுத்து சொன்னேன். ஆனால் எதையுமே சுரேந்தர் கேட்க தயாராக இல்லை. அதனாலதான் வாக்குவாதம் வந்துடுச்சு.. அப்போகூட என்கிட்ட அவர் சண்டை போடுவார்னுதான் நினைச்சேன், இப்படி அரிவாளால வெட்டுவார்னு நான் நினைக்கவே இல்லை" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications