கதற கதற வேட்டையாடிய காமுகர்கள்.. கதறி தப்பிய பெண்.. இப்படித்தான் சிக்கினர் பொள்ளாச்சி வெறியர்கள்
பொள்ளாச்சி விஷயத்தை முதன்முதலாக வெளிகொண்டு வந்தது ஒரு பெண்தான்!
Recommended Video

சென்னை: காதல் என்ற பெயரில் நாடகம் போட்டு... கதறக் கதற வேட்டையாடிய பொள்ளாச்சி காமுகர்களுக்கு ஆப்பு வைப்பது போல தீரத்துடன் நடந்து கொண்ட அந்த முகம் தெரியாத பெண்ணுக்குத்தான் அத்தனை பேரும் நன்றி சொல்ல வேண்டும்.
400 பெண்களை சீரழித்து 1500 வீடியோக்களை இந்த 4 பேரும் வைத்திருப்பதாக செய்தி வந்ததும்தான் இந்த விஷயம் ரொம்பவும் சீரியஸாக போனது!
ஆனால் இது அத்தனையும் வெளி வந்ததற்கு முழு முதற் காரணம் அந்த ஒரே ஒரு இளம்பெண்தான். அவர் பெயர் தெரியவில்லை. சென்ற மாத இறுதியில் நடந்த சம்பவம் இது.

காரை மடக்கினர்
இந்த பெண் ரிஷ்வந்த் என்பவனை காதலிக்கிறாள். அவனும் அந்த பெண்ணை காதலிப்பதுபோல் நடிக்கிறான். ஒருநாள், தன் சொகுசு காரில் பெண்ணை செல்கிறான் ரிஷ்வந்த். செல்லும் வழியிலே 3 பேர் காரை மடக்கி உள்ளே ஏறி கொள்கிறார்கள். எல்லார் கையிலும் ரொம்பவும் காஸ்ட்லியான செல்போன் இருக்கிறது.

பாலியல் சீண்டல்
ஒருவன் அந்த பெண்ணின் ஆடைகளை கழற்ற முயன்று பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறான். மற்ற 3 பேரும் செல்போனில் வீடியோ எடுக்கிறார்கள். இதை கண்டு பெண் அதிர்ச்சி அடைகிறாள்.. அலறுகிறாள்.. அவர்களை எதிர்த்துப் போராட முயல்கிறாள்.. இது சாலையில் செல்லும் மக்களுக்கு தெரியவருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், பெண்ணை சரமாரியாக அடித்து, அவள் கழுத்தில் உள்ள செயினையும் பறித்து கொண்டு நடுரோட்டில் இறக்கி விட்டு காரில் பறந்து செல்கிறது அந்த கும்பல்!

செல்போன்கள் பறிமுதல்
பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்கு அழுதுகொண்டே வருகிறாள்.. நடந்தவற்றை ஒன்றுவிடாமல் வீட்டில் சொல்கிறாள். இதைக்கேட்டு துடித்து போன பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களையும் கூட்டிக் கொண்டு ரிஷிவந்த் மற்றும் அவனது கூட்டாளிகளை தேடி செல்கிறார். இறுதியில் அவர்களை கண்டுபிடித்து சரமாரியாக அவர்களை அடித்து கையில் இருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்கிறார். பிறகு செல்போனில் தனது தங்கை சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கிறதா என சோதனையிட்ட முயன்றபோதுதான், ஆடிப்போய் உறைந்து நின்றார் அண்ணன்!

ஏதாவது செய்யுங்க சார்!
நிறைய வீடியோக்கள்.. நிறைய இளம்பெண்கள்.. எல்லாருமே தன் தங்கையை போல குடும்பத்து பெண் பிள்ளைகள்.. கதற கதற.. துடிக்க துடிக்க.. பெல்ட்டால் அடித்து... மயங்கிய உடன் எடுக்கப்பட்ட காமவெறியாட்டங்கள். இது அத்தனையையும் எடுத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷன் ஓடுகிறார் அண்ணன். இதோ ஆதாரங்கள்... எதையாவது செய்யுங்கள்... அவர்களை விட்டுடாதீங்க" என்று பதறி சொல்கிறார். இதிலிருந்துதான் இந்த விஷயம் வெட்ட வெளிச்சமாக தெரிய ஆரம்பித்தது!












Click it and Unblock the Notifications