மகளுடன் 3 மாதம் பழகி விட்டு.. ஏமாற்றி எஸ் ஆக பார்த்த இளைஞர்.. வெட்டி வீழ்த்தினார் தந்தை!
மகளை ஏமாற்றிய இளைஞரை அரிவாளால் வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: மகளுடன் 3 மாசம் பழகி, குடித்தனமும் நடத்திவிட்டு, கடைசியில் ஏமாற்ற முயன்ற இளைஞரை தாறுமாறாக அரிவாளால் வெட்டிவிட்டார் சக்திவேல்!
அம்பத்தூரில் வசித்து வருபவர் சக்திவேல். இவரது மூத்த மகள் சத்யபிரியா சட்டக்கல்லூரியில் படித்து வந்தவர். வயசு 23 ஆகிறது.
இவருக்கு ஃபேஸ்புக்கில் லாரன்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. லாரன்ஸ் அம்பத்தூரில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. பின்னர் ரெண்டு பேரும் நெருக்கமாக பழகி வந்தாகவும் கூறப்படுகிறது.

தனி வீடு
சக்திபிரியா லாரன்சுடன் பழகுவதை அறிந்த அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சண்டை
ஆனால் கடந்த ஒரு மாதமாக காதலர்களுக்கு சண்டை வந்து, பிரிந்து உள்ளார்கள். சத்யபிரியா பெற்றோருடன் வந்து சேர்ந்துவிட்டார். லாரன்ஸ் கடைக்கு தனது மகளுடன் சென்ற சக்திவேல், சேர்ந்து வாழும்படி கூறியுள்ளார். இதற்கு லாரன்ஸ் மறுப்பு தெரிவிக்கவும், ரெண்டு பேருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சரமாரி வெட்டு
ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லாரன்சை சரமாரியாக வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்குள் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இந்த சம்பவத்தை பார்த்து கொண்டு இருந்த சிலர் லாரன்ஸை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சத்யபிரியாவின் அப்பா சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்
அப்போது, "ஃபேஸ்புக் மூலமாக பழகி என் பொண்ணை ஏமாத்திட்டான், 3 மாசம் கல்யாணமே பண்ணிக்காமல் குடும்பம் நடத்திட்டு, இப்போ சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்றான்.. அதனால்தான் வெட்டினேன்" என்று போலீசாரிடம் சொல்லி உள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லாரன்சுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications