நிர்வாணப்படுத்தி... கல்லாலேயே அடித்து... கறிகடை முனுசாமி கொடூர கொலை.. மிரண்ட மதுரவாயல்!
இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர்
சென்னை: கறிகடையில் வேலைபார்க்கும் முனுசாமியின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்று விட்டார்கள். யார் கொன்றார்கள் என தெரியவில்லை.. நிர்வாணமான நிலையில் கிடந்த முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை அடுத்த மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் பலராமன் தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனால் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.. மிக கோரமான முறையில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு, அந்த சடலத்தையும் மீட்டனர்.
விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பதும் அவருக்கு 30 வயது என்பதும் தெரியவந்தது.. கோழி, கறி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.. தினமும் தண்ணி அடிப்பாராம்.
நேற்றிரவும் நண்பர் ஒருவருடன் மது அருந்த சென்றிருக்கிறார்.. ஆனால் திரும்பி வீட்டுக்கு வரவே இல்லை என்று உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் முனுசாமியுடன் மது அருந்த சென்ற நபர் யார்? முனுசாமியை அவர்தான் கொலை செய்தாரா அல்லது வேறு யாரும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் சம்பவத்தின்போது, அவருடன் மேலும் 3 நண்பர்களும் சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அப்போது அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், முனுசாமியை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கியுள்ளனர்.. அதன் பிறகுதான் அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுபோக அப்பகுதி சிசிடிவி கேமிராக்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. உடல்சிதைந்த நிலையில் இளைஞரின் சடலத்தை இன்று காலையில் அந்த பகுதி மக்கள் பார்த்து அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது!
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications