"ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே".. பிடித்து நிறுத்தியபோது.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்!
ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
சென்னை: "ஏம்மா பொண்ணு.. நில்லு.. ஏன் ஓடுறே" என்று கேட்ட போலீசார் பிறகுதான் விஷயத்தை அறிந்து ஷாக் ஆனார்கள்.
நேற்று ராத்திரி 2.30 மணி இருக்கும். வேளச்சேரி 100 அடி ரோட்டில் வழக்கமாக போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு எஸ்பிஐ வங்கி ஏடிஎம் வாசலில் ஒரு பெண் பர்தா போட்டு கொண்டு நின்றிருந்தார். கையில் ஒரு ஹெல்மட்டும் வைத்திருந்தார்.

அலறி ஓடினார்
இதை பார்த்த போலீசார், இந்த நடுராத்திரி இங்கு ஏன் பெண் நிற்க வேண்டும், என்ன, ஏதென்று விசாரிக்கலாம் என்று அருகில் சென்றனர். ஆனால் போலீசை பார்த்ததும் அந்த பெண் அலறி அடித்து ஓடினார். இதை பார்த்ததும் போலீசுக்கு சந்தேகம் வந்தது.

ஓட்டம்
அதிலும் அந்த பெண் ஓடிய ஸ்டைலை பார்த்ததும் சந்தேகம் மேலும் குழப்பமானது. ஓடற ஓட்டத்தை பார்த்தால், பொண்ணு மாதிரி தெரியலையே என்று நினைத்து பின்னாடியே துரத்தி கொண்டு ஓடினார்கள். கடைசியில் விரட்டி பிடித்து, பெண்ணின் பர்தாவையும் விலக்கி பார்த்தார்கள். அப்போதுதான் அவர் இளைஞர் என்று தெரியவந்தது.

வெல்டிங் மிஷின்
கையில் வெல்டிங் மிஷின் வைத்திருந்தார். அதாவது ஏடிஎம்மை கொள்ளையடிக்க வந்த விஷயம் பிறகுதான் தெரிந்தது. உடனடியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் பெயர் ராஜ்குமார், வயசு 24, வேளச்சேரி காந்தி ரோடில் வெல்டிங் கடை வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணை
ராஜ்குமாருக்கு நிறைய கடன் இருக்கிறதாம், எப்படி கடனை அடைக்கிறதுன்னு தெரியாமல், ஏடிஎம்மில் கொள்ளையடிக்க வந்தாராம். அதற்காக தன்னுடைய கடையில் இருந்தே வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின் என எல்லாவற்றையும் கொண்டு வந்துள்ளார். இப்படி கொள்ளை அடிக்கிறது ராஜ்குமாருக்கு இதுதான் முதல்முறையாம். அதனால்தான் பர்தா போட்டு வந்ததாக சொல்கிறார். இதையடுத்து ராஜ்குமாரிடம் விசாரணை நடக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications