29 வயது சங்கீதா செய்த காரியம்.. அதிர்ந்து நின்ற தோழி.. சென்னை போலீசார் அதிரடி கைது!
தோழி வீட்டில் நகை, பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்
சென்னை: சங்கீதா செய்த காரியத்தை பார்த்து அவரது நெருங்கிய தோழியே ஆடிப்போய்விட்டார்.. இப்போது சங்கீதாவை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துள்ளனர்.
புழல் அடுத்த வினாயபுரம், துளசி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ்... இவரது மனைவி சரண்யா.. 29 வயதாகிறது... இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கொளத்தூரில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்.. அதேபோல, புத்தாகரம், ரேவதி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் சங்கீதா.. இவருக்கும் வயது 29 ஆகிறது.

இருவரும் நெருங்கிய தோழிகள்... இதனால் ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி செல்வார்கள்.. இதில், சரண்யா வீட்டுக்கு நிறைய முறை சென்றுவருவது சங்கீதா தான்!
கடந்த 28ம் தேதி அருள்ராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்தார்... உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.. 5 சவரன் நகை, 20 ஆயிரம் திருடு போயிருந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் புழல் போலீசாரிடம் புகார் தந்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சங்கீதா குறிப்பிட்ட நாளில் வந்துபோனது தெரிய வந்தது.. அதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. முதலில் இல்லவே இல்லை என்று சாதித்த சங்கீதா, பிறகு கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார்.. சரண்யா வழக்கமாக ஆபீஸ், வெளியூர் செல்லும்போது, வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைப்பதை சங்கீதா பார்த்துள்ளர்.
அதனால் இந்தமுறை ஊருக்கு போகும்போது, அங்கு வந்த சங்கீதா, சாவியை எடுத்து வீட்டை திறந்து திருடி உள்ளார்.. பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள். ரூ.20 ஆயிரத்தையும் எடுத்துள்ளார்... திரும்பவும் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு போயுள்ளார்.
Recommended Video
இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆனால் பலவருட தோழி இப்படி ஒரு காரியத்தை செய்ததை நினைத்து சரண்யா அதிர்ந்து போய் உள்ளார்!!
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications