பக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்
கார் டிரைவரை கொன்ற வழக்கில் இளம்பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
சென்னை: டிரைவருக்கு பக்கத்துலயே உட்கார்ந்துப்பாராம் ஜெயசுதா.. அப்படியே பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில் காரை கடத்தி கொண்டு போய் விற்று விட்டு ஜாலியாக இருப்பாராம்! இப்போது ஒரு கொலையில் சிக்கி கைதாகி உள்ளார் ஜெயசுதா.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன். 51 வயதான இவர், போன 15-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சாவரப்பட்டி நான்கு வழிச்சாலை பின்புறமுள்ள மொட்டாம்பாறை எனுமிடத்தில் அழுகிய நிலையில் கிடந்தார். யார் இவரை கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை.
சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 வருஷமாக இவர் டிரைவராக உள்ளார். கல்யாணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த மாதம் 5-ந்தேதி சென்னையில் இருந்து குற்றாலத்துக்கு காரை எடுத்து கொண்டு ஒரு டிரிப்புக்காக நாகநாதன் ஓட்டி வந்துள்ளார்.

விசாரணை
அந்த காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் வந்துள்ளனர். 9-ந்தேதி வந்துவிடுவேன் என்று ஓனரிடம் சொல்லிவிட்டு போனவர்தான் வரவேயில்லை. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மதுரை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணையில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் இறங்கினர்.

படித்த பெண்
அப்போதுதான், ஜெயசுதா என்ற பெண்ணின் பெயர் அடிபட்டது. இவர்தான் அந்த காரில் சென்றுள்ளார். ஜெயசுதா திருச்சியை சேர்ந்தவர். வயது 30 ஆகிறது. நல்ல படித்த பெண். இவருடன் பெரோஸ் அகமது 34, விராலிமலையைச் சேர்ந்த ஹரிகரன் 30, காஞ்சியை சேர்ந்த ஜெகதீசன் 24 ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

உல்லாசம்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகின. பட்டதாரியான ஜெயசுதாவும், பெரோஸ் அகமதுவும் கிளாஸ்மேட்கள். மற்ற 2 பேரும் நண்பர்கள். ஜெயசுதா சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். பிறகு, பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஓட்டல் நடத்தியுள்ளார். அந்த ஓட்டலில் லாபம் கிடைக்காமல், கார்களை கடத்தி விற்கலாம் என்று 4 பேரும் திட்டம் போட்டுள்ளனர்.

டிரைவர்
வழக்கமாக காரை வாடகைக்கு புக் செய்து விட்டு, டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் ஜெயசுதா உட்கார்ந்து கொள்வாராம். வளவளவென பேசிக் கொண்டே வருவாராம். திடீரென ஒரு இடத்தில் காரை நிறுத்தி, டிரைவரை ஏதாவது வாங்கி வரும்படி சொல்வாராம். டிரைவர் கடைக்கு சென்றதுமே, காரை அப்படியே கடத்தி கொண்டு வந்துவிடுவாராம் ஜெயசுதா. அந்த காரை விற்று 4 பேரும் பங்கு போட்டு கொள்வார்களாம்.

இறுக்கி கொலை
இப்படிதான் நாகநாதனையும் காருக்குள் உட்கார்ந்து கொண்டு கடைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நாகநாதன், எங்கே வண்டியை நிறுத்தினாலும் கார் சாவியை தன்னுடனே எடுத்து கொண்டு சென்றிருக்கிறார். இதுதான் ஜெயசுதாவுக்கு கடுப்பாகி விட்டது. அதனால் 4 பேருமே சேர்ந்து நாகநாதனின் கழுத்தை ஒரு கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு, சடலத்தை அங்குள்ள பகுதியில் வீசி, பின்னர் காரை கடத்தி உள்ளனர்.

4 பேர் கைது
அந்த காரை திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கி கொண்டு, விற்றுள்ளனர். அந்த பணத்தை கொண்டு, ஆந்திரா, பெங்களூரு, இடங்களுக்கு சென்று ஜாலியாக இருந்துள்ளனர். இந்த தகவல்களை அடுத்து ஜெயசுதா உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications