மெரினா சென்றுவிட்டு மின்சார ரயிலில் வந்த இளம்பெண்.. திடீரென வாந்தி எடுத்து மரணம்.. சென்னையில் சோகம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்த்து விட்டு வேளச்சேரி பறக்கும் ரயிலில் திருவான்மியூருக்கு நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த இளம்பெண் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மின்சார ரயிலில் பயணம் செய்த பெண் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு பறக்கும் ரயிலில் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

மெரினாவை சுற்றி பார்த்துவிட்டு
சென்னை மெரினா கடற்கரையை சுற்றி பார்ப்பதற்காக கடலுரை சேர்ந்த மோனிஷா தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். மெரினா கடற்கரையை சுற்றிப்பார்த்து நண்பர்களுடன் பொழுதை கழித்த மோனிஷா, மெரினா கடற்கரையில் பானிபூரி, சுண்டல், சோளம் ஆகியவற்றையும் வாங்கி சாப்பிட்டுள்ளர். மெரினாவை சுற்றி பார்த்து முடித்த பின்னர் சென்னை பீச் முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயிலில் ஏறி திருவாண்மியூருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

மயங்கி விழுந்துள்ளார்
ரயில் மயிலாப்பூர் நிலையம் அருகே வந்த போது திடீரென வாந்தி எடுத்து மோனிஷா மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன மோனிஷாவின் நண்பர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மோனிஷா இறந்து விட்டதாக கூறினர். இதனால், துக்கம் தாங்க முடியாமல் அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

எதனால் மரணம் ஏற்பட்டது
இளம்பெண் மரணம் குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மெரினா கடற்கரைக்கு சென்ற மோனிஷா அங்கு கடைகளில் விற்கப்படும் பானி பூரி, சோளம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு ரயிலில் ஏறியிருக்கிறார். அதன்பிறகே மயங்கி விழுந்து இறந்ததால் மெரினாவில் சாப்பிட்ட உணவு பொருளால் மரணம் ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் மாரடைப்பு மரணம்
சமீப காலமாக இளம் வயதினர் திடீரென உயிரிழப்பது அதிகரித்து வருகிறந்து. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த 21 வயது கல்லூரி மாணவரான சத்ய சாய் என்பவர் திடீரென சுருண்டு விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இளம் வயதினரின் வாழ்க்கை முறை
சமீப காலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறதுஇதற்கு இளம் வயதினரின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம் உள்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உலக அளவில் இதயநோய் பதிப்புக்கு அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உள்ளது என்பதை உலக சுகாதார அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications