திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை அடித்தே கொன்ற தம்பி
சென்னை: திருவள்ளூரில் அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரம் அடைந்த தம்பி, தனியார் நிதி நிறுவன ஆடிட்டரை மகளிர் போலீஸ் நிலையம் எதிரே அடித்துக்கொலை செய்தார். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் கண்ணதாசன் நகர் பெரியார் தெருவை சேர்ந்த 48 வயதாகும் ராபர்ட், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வனிதா (43). இவர்களுக்கு யஸ்வந்த் (12) என்ற மகனும், அஸ்வினி (4) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று காலை காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த நிறுவனத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 'லிப்டில்' வந்த அந்த பெண்ணிடம், ராபர்ட் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண், திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை 5 மணிக்கு ராபர்ட்டை நேரில் வரவழைத்து விசாரித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு இரவு 7 மணிக்கு போலீசார் ஆடிட்டர் மற்றும் பெண்ணை சமரசம் செய்து அனுப்பினர்.
இதனிடையே ஆடிட்டர் ராபர்ட், திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது தவறாக நடக்க முயன்றாக புகார் அளித்த பெண்ணும் வந்துள்ளார். அப்போது புகார் அளித்த இளம் பெண்ணின் தம்பி மவுலி (23) என்பவர், "எனது அக்காவிடம் தவறாக நடக்க முயன்றாயா?" என ஆவேசமாக ஆடிட்டர் ராபர்ட்டின் தலையில் கையால் தாக்கினாராம். இதில் ஏற்கனவே உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ராபர்ட் நிலை தடுமாறி மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து ராபர்ட் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ராபர்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மவுலியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அக்காவிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டி போலீஸ் ஸ்டேசன் வாசலில் ஆடிட்டரை பெண்ணின் தம்பி அடித்தே கொன்ற சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications