கார், பங்களா என ஏமாற்றி மேட்ரிமோனி மூலம் 12 பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது - சிக்கிய அந்தரங்க வீடியோ!
சென்னை: மேட்ரிமோனி தளங்களில், பங்களா, சொகுசு கார் படங்களை காட்டி தொழிலதிபர் போல ஏமாற்றி 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது லேப்டாப்பில் அந்தரங்க வீடியோக்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் கோபிநாதன் (25). இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் செயல்பட்டு வரும் ஆன்லைன் மேட்ரிமோனி செயலிகளில் தொழிலதிபர் என பதிவு செய்து, திருமண வரன் தேடி வந்துள்ளார். விலை உயர்ந்த சொகுசு கார், ஆடம்பர பங்களா, பெரிய தொழிற்சாலையின் பின்னணியில் இருப்பது போன்ற புகைப்படங்களைப் பதிவேற்றி தன்னை தொழிலதிபர் போல காட்டிக் கொண்டுள்ளார்.

பல்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்த பெண்களிடம், 'நானும் உங்கள் சாதி, மதம் தான் என்று கூறி வரன் தேடும் பெண்களிடம் அறிமுகமாகி பேசி வந்துள்ளார் கோபிநாதன். கோபிநாதன் அந்த இளம்பெண்களிடம், "நான் மிகப்பெரிய தொழிலதிபர். வசதியான ஒரு குடும்ப பின்னணியை சேர்ந்தவன். அம்மா துபாயில் பெரிய தொழிலை நிர்வகித்து வருகிறார்" என்று கூறி ஏமாற்றி வந்துள்ளார்.
இதனை நம்பிய பல பெண்கள் இவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி பேசி வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கோபிநாதன் தொழில் தொடர்பாக அடிக்கடி வெளியூர் செல்வதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று, அவர்களில் சில பெண்களை வெளியில் அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.

தனியார் ஐடி துறையில் இன்ஜினியராக பணிபுரியும் பெண் ஒருவர் ஆன்லைன் செயலியில் கோபிநாதனின் விவரங்களை பார்த்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவரை பிடித்து போகவே, அந்த பெண் தொடர்ந்து கோபிநாத்திடம் பேசி வந்துள்ளார். இதையடுத்து கோபிநாதன் அந்த பெண்ணிடம் தொழில் தொடர்பாக வெளியூர் செல்வதாகவும், வங்கி கணக்கு முடங்கியுள்ளதால் தனக்கு பணம் அவசரமாக தேவைப்படுவதாக கூறி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஜி-பே மூலம் பெற்றுள்ளார்.
சில நாட்கள் கழித்து தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறி சுமார் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை அந்தப் பெண்ணிடம் மீண்டும் வாங்கி உள்ளார். பிறகு மீண்டும் அதே பெண்ணிடம், தனது வங்கிக்கணக்கில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை வங்கி அதிகாரிகள் முடக்கி விட்டதாகவும், அதை மீட்க பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என கூறி கோபிநாதன் கடன் கேட்டுள்ளார்.
இதற்காக அந்த பெண் வங்கியில் ரூபாய் 6 லட்சம் கடன் பெற்று 3 லட்சம் ரூபாயை கோபிநாத்திடம் வழங்கி உள்ளார். இதேபோல் அடிக்கடி கேட்டு மொத்தம் சுமார் 9.80 லட்சம் பணத்தை கோபிநாதன் அப்பெண்ணிடம் இருந்து பெற்றுள்ளார். இதையடுத்து சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு கோபிநாதன் தனக்கு இன்னும் சிறிது நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும், இதுதொடர்பாக என் அண்ணன் உன்னுடன் பேசுவார் என்றும் கூறி யாரோ ஒருவரிடம் செல்போனை கொடுத்து பேச வைத்துள்ளார். அவர், "இப்போது கல்யாணம் வேண்டாம். பிறகு வைத்துக்கொள்ளலாம்" என இந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
கோபிநாதன் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்தப் பெண் தனியார் துப்பறியும் நிறுவனத்திடம் அவர் தொடர்பான விவரங்களை அளித்து அவரைப் பற்றிய உண்மைத் தகவல்களை கண்டறியுமாறு கேட்டுள்ளார். தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வு செய்து கோபிநாதன் தொழிலதிபர் கிடையாது என்பதையும், இது போல் பலரிடம் மோசடி செய்து வந்ததையும் கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கோபிநாதனை தாம்பரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.
லேப்டாப்களை ஆய்வு செய்த போது தொழிலதிபர் என்று கூறி கடந்த 3 மாதங்களில் 12க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அந்த லேப்டாப்பில் சிக்கியுள்ளன. எனவே, அந்த வீடியோக்களை காட்டி யாரையும் மிரட்டி பணம் பறித்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபிநாதனிடம் ஏமாந்த பெண்களை விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த மோசடியில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications