16 வயதினிலே.. அதாவது 11ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே.. ஹரீஷுக்கு "அதை" பார்ப்பதுதான் வேலை!
சென்னையில் சிறார் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சென்னை: 16 வயதினிலே.. அதாவது 11-ம் வகுப்பு படிக்கும்போதிருந்தே.. "அந்த" மாதிரியான படங்களை பார்ப்பதுதான் ஒரே ஹாபி... 500 ஆபாச வீடியோக்கள் வரை டவுன்லோடு செய்து பார்த்து ரசித்து வந்துள்ளார் 24 வயதே ஆன இளைஞர்.. இவர் ஒரு டியூஷன் டீச்சரின் மகன் என்பது கூடுதல் தகவல்!
குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது என்று மட்டுமல்ல.. செல்போனிலேயே வைத்திருக்கக்கூடாது என்று கூடுதல் டிஐஜி ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார்... ஏதோ கடமைக்காக சொல்கிறார்கள் என்று சில குரூர இளைஞர்கள் நினைத்து விட்டார்கள் போல இருக்கிறது!!
எந்நேரமும் விழிப்புடன்.. இதே வேலையில் இறங்கி ஆபாச படம் பார்க்கும் நபர்களின் ஐபி நம்பர்களள் வரை பிடித்து இழுத்து கைது செய்து வருகிறது தமிழக போலீஸ்!

தடுப்பு நடவடிக்கை
பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும்தான் இப்படி ஒரு அதிரடியில் போலீசார் இறங்கி உள்ளனர்.. அதனாலேயே இது சம்பந்தமான எச்சரிக்கையை பலமுறை விடுத்து வருகின்றனர்.. எனினும் ஆங்காங்கே இன்னமும் இந்த குற்றம் குறையவில்லை.ஆபாச படம் பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட 15 பேரை பிடித்து கைது செய்தும் வருகிறார்கள்.

ஆபாச வீடியோ
இவ்வளவு விஷயங்கள் தெரிந்தும், இளைஞர் ஒருவர் திரும்பவும் அந்த படத்தை பார்த்துள்ளார்.. சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் விபிசி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். 24 வயதாகிறது.. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ளார்.. தடைசெய்யப்பட்ட குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோவை தன்னுடைய டவுன்லோடு செய்து பார்த்துள்ளதாக போலீசாருக்கு விவரங்கள் கிடைத்தது.

அதிர்ச்சி
இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படத்தை டவுன்லோடு செய்து 2 வருஷமாக பார்த்து வந்துள்ளார்.. இதையடுத்து, அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போதுதான் போலீசாருக்கு மேலும் அதிர்ச்சியான விஷயங்கள் தெரியவந்தன.

டியூஷன் டீச்சர்
24 வயதே ஆன ஹரீஷ், 500 ஆபாச வீடியோக்களை இதுவரை டவுன்லோடு செய்திருக்கிறார்.. அதாவது 11 ஆம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இப்படிப்பட்ட வீடியோ பார்ப்பது ஹரீஷூக்கு பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. இவரது அம்மா ஒரு டியூஷன் டீச்சராம்.... ஊருக்கெல்லாம் பாடம் நடத்தி என்ன பிரயோஜனம்? சரியான வழிகாட்டுதல், கண்காணிப்பு, கண்டிப்பு இல்லாமல் போய்... இப்போது பெற்ற மகன் ஜெயிலில் உள்ளார்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications