வேலூர் பெண்ணுக்கு சென்னை லாட்ஜில் நடந்த கொடுமை.. மது போதையில் மயக்கம்.. காலையில் கண் விழித்தால் கொடுமை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் தோழியுடன் லாட்ஜில் தங்கியிருந்த போது, போதையில் மயங்கி கிடந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலையில் எழுந்து பார்த்த போது தான் பிறப்பு உறுப்பில் காயம் ஏற்பட்டதை வைத்து பலாத்காரம் செய்யப்பட்டது அந்த பெண்ணுக்கு தெரிந்துள்ளது. இது தொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில், அவரது தோழி மற்றும் விவசாய துறை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் புளோரிடா. இவரும் வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். வேலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தோழிகள் இருவருக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து லாட்ஜில் ரூம் எடுத்து மது குடித்து மகிழ்வார்கள்.

4 பேரும் மது குடித்துள்ளனர்
அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி அன்றும் இருவரும் சேர்ந்து நுங்கம்பாக்கம் அருகே உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். வழக்கம்போல் அன்றும் அவர்கள் மது குடித்து உள்ளனர். அப்போது புளோரிடா இரண்டு ஆண் நண்பர்களுக்கு போன் செய்து அழைத்து இருக்கிறார். விவசாய துறை ஊழியராக வேலை பார்த்து வரும் வாலிபர் உள்பட இரண்டு பேர் அங்கு வந்து இருக்கிறார்கள்.
அப்போது புளோரிடாவை பார்த்து இவர்களை ஏன் வரவழைத்தாய் என்று வேலூர் இளம்பெண் கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் நம்பிக்கையானவர்கள் தான் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து 4 பேரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக குடித்ததில் வேலூர் இளம்பெண் விடுதிக்கு செல்ல இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் புளோரிடா வெளிநாட்டு மதுபானங்கள் இப்போது ஆர்டர் செய்திருக்கிறோம்.
காலையில் கண்விழித்த போது
அதை குடித்துவிட்டு போ என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதில் அவர் அந்த மதுவையும் குடித்ததில் அங்கேயே போதையில் மயங்கி இருக்கிறார். இதற்கு அடுத்து என்ன நடந்தது என்றே அவருக்கு தெரியவில்லையாம். இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் கண் விழித்தபோது, தன் உடம்பில் ஆடை இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அதே பெட்டில் அவரது அருகில் விவசாய துறை ஊழியர் படுத்து கிடந்துள்ளார்.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது அவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து தனது தோழி புளோரிடா மற்றும் வாலிபரை கண்டபடி திட்டியுள்ளார். அப்போது இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வேலூருக்கு சென்ற இளம்பெண் நடந்தது பற்றி பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து வேலூர் போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்துள்ளனர்.
2 பேர் கைது
சம்பவம் நடந்தது சென்னை என்பதால் சென்னை போலீசில் புகார் அளிக்க கூறியுள்ளனர். இதையடுத்து அந்த பெண் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விவசாயத்துறை ஊழியரை கைது செய்தனர். புளோரிடாவையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications