சென்னையில் நடுரோட்டில் கல்லூரி மாணவியை வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நடுரோட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயம் அடைந்த மாணவி சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் பொன். பாக்கியராஜ்.இவருக்கு 19 வயதாகிறது.
இவர் ஒரு கல்லூரி மாணவி ஒருவரை 4 வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண் இவரிடம் நட்பாக பழகி வந்தாராம்.

கல்லூரி மாணவி
ஒரு கட்டத்தில் இவர் காதலை சொல்லிய நிலையில் காதலை ஏற்க கல்லூரி மாணவி மறுத்துவிட்டாராம். இந்நிலையில் அந்த கல்லூரி மாணவி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வந்துள்ளார்.

சரமாரிய வெட்டினார்
காதலிக்க மறத்ததால் ஆத்திரத்தில் இருந்த பாக்கியராஜ் அவரை நேற்று பின்தொடர்ந்து சென்றுள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவரது இரு கைகளையும் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவியை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அதன்பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மாணவியை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

4 வருட காதல்
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாக்கியராஜை கைது செய்தனர்.அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனிடையே தானும் கல்லூரி மாணவியும் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும், தன்னுடன் பேசாமல் இருந்த காரணத்தால் வெட்டியதாகவும் கூறினார்.

நட்பு மட்டுமே
ஆனால் இந்த மாணவி மறுத்துள்ளார். தன்னை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், ஆனால், தான் அவரை காதலிக்கவில்லை என்றும் நட்பாக மட்டுமே பழகியதாவும் தெரிவித்துள்ளார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications