சென்னை கோயம்பேடு அருகே இளைஞர் தலையில் அடித்துக் கொலை
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே நெற்குன்றம் ஏவிகே நகரில் அட்டை கம்பெனி ஒன்று உள்ளது. அதன் அருகே இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விசாரணையில், நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் அவரது தலையில் பாட்டில் மற்றும் கற்களால் அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ரஞ்சித் கடந்த ஆண்டு பூவிருந்தவல்லியில் பணியில் இருந்த அன்பழகன் என்ற போலீஸை அரிவாளால் வெட்டியவர். ரஞ்சித் கொலை தொடர்பாக அவரது நண்பர்கள் மாடா விக்கி, பேட்டை சுரேஷ், பலாக்கொட்டை கார்த்தி, மண்ட தினேஷ், ஹரிஹரசுதன், இஸ்ரேல் உள்ளிட்டோருக்கு சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications