"மாஸ்டர்மைண்ட்".. கேமர் மதனுக்கு மனைவி கிருத்திகாவும் உடந்தையாக இருந்தது அம்பலம்.. அதிரடி கைது!
சென்னை: சிறுமிகளிடம் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியதாகவும், பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் கேமர் மதன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டுள்ளார். மதனின் யூடியூப் சேனலில் கிருத்திகாதான் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்தவ யூ டியூப் கேமர் மதன் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இவர் மீது 150க்கும் மேற்பட்ட பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது.

கேமர் மதன்
கேமர் மதன் மீது பல்வேறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார். நேற்று முதல்நாள் மாலைக்குள் இவர் போலீசில் சரணடைய வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டு இருந்த நிலையில், போலீசில் சரண் அடையாமல் தலைமறைவாகிவிட்டார். சிபிசிஐடி போலீசார் இவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மனைவி
இந்த நிலையில் முகத்தை மூட வெளியே காட்டாமல் சுற்றி வந்த கேமர் மதனின் வீட்டை கண்டுபிடித்த போலீசார், அவரின் மனைவி மற்றும் அப்பாவிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை போலீசார் இரண்டு முறை, மொத்தம் 12 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

வீடியோ
மதன் எங்கே, இந்த சேனல் எப்படி இயங்கியது, சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் எப்படி கிடைத்தது, எவ்வளவு பண மோசடி செய்யப்பட்டது, உங்களுக்கு உடந்தையாக இருந்தது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தினார்கள். இந்த 12 மணி நேர சிபிசிஐடி விசாரணையில் மதன் நடத்தும் யூட்யூப் சேனலின் நிர்வாகி கிருத்திகா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மதன்
இந்த தவறுகளை மதன்தான் செய்தார் என்றாலும் அவரின் மனைவி கிருத்திகாவும் உடன் இருந்திருக்கிறார். இவரும் இந்த தவறுகளை செய்ததில் ஒரு மாஸ்டர் மைன்ட் என்று கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியமாக அந்த யூ டியூப் கிருத்திகாவின் மெயில் ஐடியை வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு தெரிந்தே எல்லா பாலியல் குற்றங்களும் நடந்துள்ளது.

விசாரணை
இதையடுத்து கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர். கிருத்திகாவை கைது செய்த நிலையில் மதனும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. மதன் சரண்டர் ஆக வாய்ப்புள்ளது என்கிறார்கள். மதனின் அப்பாவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications