Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்காக முதல்ல ஓடிவந்தது யார் பாருங்க.. தவெகவில் இப்படியும் யோசிக்கிறாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக சோஷியல் மீடியாவில் வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீசார் ஏற்கனவே வார்னிங் தந்திருந்தனர்.. அப்படியிருந்தும் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் வதந்தி பரப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.. பிறகு, கரூர் சம்பவத்தில் அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டையும் நேற்று போலீசார் கைது செய்தனர். ஆனால், இன்று பெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையமும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது..

felix gerald youtuber TVK

கரூர் சம்பவம்

அதேபோல கரூர் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் திமுகவின் சதி உள்ளதாகவும், செந்தில் பாலாஜிதான் முழுகாரணம் என்றும் இணையத்தில் தகவல்கள் பரப்பப்பட்டன. மேலும், கரூர் நிகழ்ச்சி தொடர்பான சில வீடியோக்களும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டன..

இதையடுத்து, கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது

கரூர் சம்பவம் பற்றி பொதுவெளியியில் வதந்தி பரப்பினால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்று போலீஸ் தரப்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..

அவர்களில், பாஜகவை சேர்ந்த சகாயம், தவெக நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.. அதேபோல நேற்று காலையில், பிரபல ரெட் பிளிக்ஸ் யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார், அவரது வீடு புகுந்து கைது செய்திருந்தனர்.

கரூர் சம்பவம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில், அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் ஜெரால்டு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று காலையில் கைதான பெலிக்ஸ் ஜெரால்டை, கமிஷனர் ஆபீஸில் வைத்து விசாரணையையும் போலீசார் மேற்கொண்டனர்.

ஜெரால்டுக்கு ஆஞ்சியோ

இந்த விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோதே, நேற்று மாலையில் திடீரென பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பெலிக்ஸ்க்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜாமீனில் பெலிக்ஸ் ஜெரால்டு

இதனிடையே விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பெலிக்ஸ் ஜெரால்டை தவெக வழக்கறிஞர்கள் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது..

ஏற்கனவே திமுக தரப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி, நீதிமன்றம் வரை சென்றுவருகிறார்கள் தவெகவினர்.. இப்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பெலிக்ஸ் ஜெரால்டுக்காகவும் ஜாமீன் தந்து, அவரை வெளியே எடுத்திருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+