நாதஸ் ஏன் திருந்திட்டேன்னு சொன்னாருன்னு இப்போதான தெரியுது! இர்பான் மன்னிப்பு கேட்டது இதுக்குத் தானா?
சென்னை: பிரபல யூட்யூபரான இர்பான் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது மனைவியுடன் காரில் சென்று ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கினார். அந்த வீடியோவை தனது யூட்யூப் சேனலிலும் வெளியிட்டிருந்தார். அப்போது சிலரிடம் மிகக் கோபமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை பெற்றது. இந்த நிலையில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ போட்டு இருக்கிறார் இர்ஃபான். அவரது வீடியோக்களுக்கு வியூஸ் கிடைக்காததால் இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக விமர்சனம் எழுந்தது. உண்மையில் சமீபத்தில் இர்பான் போட்ட எந்த வீடியோவும் அதிக பார்வைகளை பெறவில்லை என்பது அவரது சேனலை பார்த்தாலே தெரிகிறது.
பிரபல யூட்யூபரான இர்பான் தனது இர்ஃபான்ஸ் வியூ சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் பேட்டியையும் தனது இர்ஃபான்ஸ் வியூ சேனலில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தனது காரில் மனைவியுடன் சென்ற இர்ஃபான் காரில் இருந்து கொண்டே சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள், பணம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதனை பார்த்த ஏராளமானோர் அவரது காருக்கு அருகே சென்று முண்டி அடித்துக் கொண்டு உதவிகளை வாங்கினர். அப்போது கடும் கோபமான இர்ஃபான் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு கொடுக்கத்தானே வந்திருக்கிறோம் என கோபமாக பேசினார்.
ஆனால் அந்த வீடியோவை அவரது யூட்யூப் சேனலில் எடிட் செய்யாமல் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் கடும் கண்டனங்கள் குவிந்தது. குறிப்பாக தவ்ஹீத் ஜமாத், பிரபல தொகுப்பாளரான விஜே பார்வதி உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். குறிப்பாக," இர்ஃபான் பெரிய ஜமீன் பரம்பரை.. சார் காரில் உட்கார்ந்து கொண்டுதான் மக்களுக்கு சேவை வழங்குவாரு..தன்னிடம் காசு இருக்கிறது என்பதை வந்து.. எப்படி எல்லாம் கேவலமாக.. இங்க தான் அவனது மூளை வெளிப்படுது.. இந்த மாதிரி சீப் மெண்டாலிட்டி உள்ளவர்களை பற்றி பெரிய லிஸ்டே இருக்கிறது.. இவனுங்களையா நம்ம வந்து புரேமோட் பண்றது.. " என விமர்சனங்கள் எழுந்தது.
ஏற்கனவே இது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி வழக்குப்பதிவு வரை சென்ற இர்ஃபானின் செயல் கூடுதல் எரிச்சலை ஏற்படுத்த நிலையில் பலரும் அவரது சேனலை அன்சப்ஸ்கிரைப் செய்ய தொடங்கினர். அவரது சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை மலமலவென சரிந்த நிலையில் அவரது வீடியோக்களுக்கும் பார்வைகள் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் தான் நேற்று 'ஐ வாஸ் ராங்' என வீடியோ போட்டு இருந்தார் இர்ஃபான்.
அதில் பேசியுள்ள அவர்," சர்ச்சையில் நடந்த போது விளக்கம் அளிக்கலாம் என்று நினைத்தேன். இப்போது விளக்கம் அளிக்க வேண்டாம் என என்னுடைய நண்பர்கள் சொன்னதால் அமைதியாக இருந்து விட்டேன். வறுமையில் இருப்பவர்களை நான் ஏளனமாக பேசவே கிடையாது. நான் அப்படிப்பட்ட ஆளும் கிடையாது. என்னை விமர்சித்தவர்கள் வீடியோக்களை நான் பிளாக் செய்யவில்லை. அதற்கு ஒரு நிறுவனம் தான் காரணம். என் வீட்டில் பேசுவது போலவே குழந்தைகளை 'அதுங்க இதுங்க' என பேசி விட்டேன். எனவே நான் பண்ணது தப்பு ஒப்புக்கொள்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன" என வீடியோ போட்டு இருந்தார்.
இந்த நிலையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது வீடியோ போட என்ன காரணம்? யூட்யூப் சேனலில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்ததும், வீடியோவின் பார்வைகள் குறைந்தது தான் காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்தனர். இதை அடுத்து நாமாகவே இர்பான் சேனலின் வீடியோக்களை பார்த்தோம். உண்மையிலேயே லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளிய அவரது சேனல் தற்போது காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. 15 ஆயிரம் 20 ஆயிரம் ஒரு லட்சம் என அவரது வீடியோ பார்வைகள் எண்ணிக்கை வெகுவாக சரிந்து இருக்கிறது. உண்மையில் அதன் காரணமாக தான் இர்பான் வீடியோ போட்டு இருந்தாலும் போட்டிருப்பார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications