ஆக்ஷனில் இறங்கிய மருத்துவத்துறை.. சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கினார் யூடியூபர் இர்பான்
சென்னை: தனது மனைவிக்கு நடந்த பிரசவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய இர்பான், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கியுள்ளார். மருத்துவத்துறை காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் இர்பான் வீடியோவை நீக்கியுள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பான், தனது யூடியூப் சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். அண்மையில் திருமணம் செய்து கொண்ட இர்பான், தனது மனைவியின் கருவில் உள்ள பாலினத்தை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இர்பானின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மருத்துவத்துறையும் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் வழங்கினார். இதனால், அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை கைவிட்டது. இந்த நிலையில்தான், இர்பான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தனது மனைவியின் பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்று, தன் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி அதை வீடியோவாக அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இர்பானின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி குழந்தை பிறந்தது. அப்போது பதிவு செய்த வீடியோவை இர்பான், தனது யூடியூப் சேனலில் நேற்று முன் தினம் பதிவேற்றியிருந்தார். இந்த வீடியோவில்,
மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதேபோல, அறுவை சிகிச்சையின் போது டாக்டர் ஒருவர் கத்தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் காட்சிகளும் இருந்தன. இர்பானின் இந்த செயல் மருத்துவ சட்டப்படி தவறு ஆகும்.
முறையான பயிற்சி எதுவும் இன்றி இர்பான் இத்தகைய செயலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று மருத்துவர்கள் பலரும் கூறியிருந்தனர். இர்பான் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. மருத்துவத்துறையின் கவனத்திற்கும் இர்பானின் செயல் சென்ற நிலையில், சோழிங்கநல்லூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பிரசவம் நடந்த தனியார் மருத்துவமனையிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இர்பான் வீடியோ தொடர்பாக மண்டல சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவை இயக்குனர் டாக்டர் ராஜமூர்த்தி கூறுகையில், மருத்துவமனை நிர்வாகத்திடமும், யூடியூபர் இர்பானிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவரது விளக்கம் சரியாக இல்லை என்றால் இர்பான் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்" என்றார்.
இர்பானின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார். முன்னதாக இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியிருந்தது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications