மதன் ஆடிய ஆட்டம் என்ன.. இப்போ போச்சா.. 2 ஆடி கார்கள் பறிமுதல்.. வங்கியிலுள்ள 4 கோடி முடக்கம்
சென்னை: பாலியல் ஆபாச பேச்சுக்கள் மூலம் பல கோடி சம்பாதித்த பப்ஜி மதன் மற்றும் மனைவி கிருத்திகா வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Recommended Video
இந்த வங்கி கணக்கில் ரூ.4 கோடி பணம் இருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2 ஆடி சொகுசு மற்றும் ஆடம்பர கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பல தோழிகளுக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்து மதனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோவில் பேச வைத்துள்ள தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாசம்
பப்ஜி விளையாட்டுக்கு டிப்ஸ் கொடுப்பதாகக் கூறிக் கொண்டு, மதன், ஆபாசமாகப் பேசுவது வழக்கம். கெட்ட வார்த்தைகளில் பெண்களை திட்டுவார். காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகள் பேசுபவர், அதை கேட்டுவிட்டு முன்ஜாமீன் கேட்டு வாங்க என உயர்நீதிமன்றமே திட்டும் அளவுக்கு மோசமானவர் மதன்.

கேவலத்தில் மனைவி பங்கு
இந்த வீடியோவில் பெண்களும் ஆபாசமாக பேசுவது வழக்கம். அதில் ஒரு பெண், மனைவி கிருத்திகாவின் குரலாகும். எனவே அவரை நேற்று சேலத்தில் காவல்துறை கைது செய்தனர். இதனிடையே மதன் காணொளியை பிரபலம் செய்யச் சிலருக்குக் காசு கொடுத்து வீடியோ வெளியிட வைத்துள்ளார் மதன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சம் ஒரு பெண்ணுக்கு இதுவரை 5 லட்சம் வரை மதன் கொடுத்துள்ளார். ஒவ்வொரு வீடியோவுக்கும் 5 ஆயிரம் தரப்படுமாம். புகழ்ந்து பேசவும் ஆட்களை நியமித்து சம்பளம் கொடுத்துள்ளார் மதன். இப்படி இவர் நடத்திய நாடகங்களை உண்மை என நம்பிதான் பல இளம் பெண்களும் இவர் வலையில் விழுந்துள்ளனர்.

நவீன ஆடி கார்கள்
இப்படியெல்லாம் மோசடி செய்து ஆபாசமாகப் பேசி சம்பாதித்த பணத்தில் ரூ.4 கோடி வரை கிருத்திகா வங்கிக் கணக்கிலிருந்தது. அதி நவீன 2 ஆடி சொகுசு கார்களை மதன் வாங்கியிருந்தார். இதையடுத்து வங்கி கணக்கை முடக்கிய போலீசார், 2 கார்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துவிட்டனர். அவர் பணம் கொடுத்ததால் ஆபாசமாகப் பேசிய பெண்களை தேடும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

காலில் விழுந்தார்
பப்ஜி மதன் இன்று தருமபுரியில் கைது செய்யப்பட்டார் என்பதும், அப்போது போலீசாரின் கால்களில் விழுந்து கெஞ்சினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சொகுசாக வாழ்ந்த அவர் இப்போது கம்பி எண்ணப் பயந்து போய் இப்படி கதறியுள்ளார். தன்னை கைதுசெய்ய முடியாது எனச் சவால் விடுத்தவர் இவர். போலீசாரை பார்த்ததும்தான் காவல்துறை வலிமை என்ன என்பதை அவர் அறிந்து காலில் விழுந்துள்ளார்..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications