What bro It's very wrong Bro..! டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த போலீஸ்.. இனி ஒரு பைசா கூட கிடைக்காது!
சென்னை: திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசனின் வங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு திருப்பதிக்கு சென்றிருந்த டிடிஎஃப் வாசன் தரிசன வரிசையில் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல பைக் ரைடரான டிடிஎஃப் வாசன் தான் பயணம் செய்யும் வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றியதை அடுத்து அவருக்கு பல லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.

மேலும் அவரை பைக் ரைடர்களும் ஹீரோ போல கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக 2கே கிட்ஸ்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமாக இருக்கிறார். டிடிஎஃப் வாசன்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் வந்த கூட்டம் தான் தற்போது இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.
கடந்த 2022ஆம் ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு வைத்த ரசிகர்கள் சந்திப்பில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால் கோயம்புத்தூரே திணறிப் போனது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான டிடிஎப் வாசனுக்கு அப்போதிருந்து தான் பஞ்சாயத்தே ஆரம்பித்தது.
தொடர்ந்து பல இடங்களுக்கும் பைக்கில் சென்ற டிடிஎஃப் வாசனுக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக அடுத்தடுத்து அபராதங்கள் விதிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக காவல் நிலையங்களிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரச்சனை இருந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கினார். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பைக்கில் சென்ற போது காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பயணித்தார் டிடிஎப்.
அப்போது வீலிங் செய்ய முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த டிடிஎப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் ஜாமினில் வெளிவந்த அவரது லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது. தொடர்ந்து பைக்கை ஓட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வந்த டிடிஎஃப் வாசன் திருப்பதி கோவில் சென்ற போது அங்கு வீடியோ எடுத்ததால் சர்ச்சையில் சிக்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனத்திற்காக சென்றிருக்கிறார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அறைகளில் காத்திருந்தார்கள். அப்போது தனது நண்பர்களுடன் அங்கு சென்ற டிடிஎஃப் வாசன் நடை கதவை திறப்பது போல சென்றதோடு பக்தர்கள் எழுந்து நின்றதும் வடிவேலு போல சிரித்து கிண்டல் செய்து கொண்டே ஓடினர். மேலும் அதனை வீடியோவாக எடுத்து யூட்யூபிலும் போட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றி பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியிருந்தது. இது தொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.
ஏற்கனவே பல வழக்குகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், அவருக்கு சிக்கல் முளைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு ஆந்திர போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். டிடிஎஃப் வாசனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக ஆந்திர போலீசார் கூறியுள்ளனர். பக்தர்களை புண்படுத்தி எடுத்த வீடியோவை யூடியூபில் பதிவிட்டு பணம் பார்த்த நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக ஆந்திர போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications