சிறையில் நள்ளிரவில் கதறிய டிடிஎப் வாசன்! மருத்துவமனையில் கை கட்டு இல்லாமல் ஜாலி வாக்கிங்-ஷாக் தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக பைக்கில் வந்து வீலிங்க் அடித்த வழக்கில் சிக்கிய யூ டியூபர் டிடிஎப் வாசன் சென்னை புழல் சிறையில் இடுப்பு வலி ஏற்பட்டதாக நள்ளிரவில் கதறி இருக்கிறார். ஆனால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்த போது கையில் இருந்த கட்டும் காணாமல் போய் ஜாலியாக டிடிஎப் வாசன் வலம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யூடியூபர் டிடிஎப் வாசன்.. இது 2கே கிட்ஸ்கள் ரசிக்கும் பெயர். ஆனால் டிடிஎப் வாசன் போன்ற சமூகத்தின் மோசமான முன்னுதாரணங்களை எப்படி போலீசார் இன்னமும் வெளியில் சுற்ற அனுமதிக்கின்றனர்? என்பது நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருக்கும் பெற்றோர் குமுறல்.

 Youtuber TTF Vasans High drama in Chennai pirison

ஏன் முடக்கவில்லை?: இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக அதிவேகமாக சென்று சாகசங்களில் ஈடுபடுவது, அதை வீடியோ படம் எடுத்து யூடியூப்பில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதுதான் டிடிஎப் வாசன். இந்த சாகசனங்களில் மயங்கிப் போகினறனர் 2கே கிட்ஸ். இப்படி அதிவேகமாக பைக் ஓட்டி அடிக்கடி சிக்கி கொள்ளும் டிடிஎப் வாசனின் லைசென்ஸ் உரிமத்தை ஏன் போலீசார் முடக்கி வைக்காமல் நடமாட விடுகின்றனர் என்பது கேள்வி.

சிக்கி சிறை வாசம்: இந்நிலையில் பெங்களூர் செல்லும் வழியில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வீலிங் சாகசம செய்ய முயன்று பல அடி தூரத்துக்கு தூக்கி வீசபப்ட்டார் டிடிஎப் வாசன். இதில் படுகாயமடைந்து கை கட்டுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் வாசன்.

 Youtuber TTF Vasans High drama in Chennai pirison

நள்ளிரவில் கதறல்: ஆனால் சென்னை புழல் சிறையில் நேற்று நள்ளிரவு எனக்கு முதுகு வலிக்கிறது; இடுப்பு வலிக்கிறது என முறையிட்டுள்ளார். இதனையடுத்து இரவோடு இரவாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு டிடிஎப் வாசன் அழைத்து வரப்பட்டார்.

எல்லாமே நடிப்பு?: மருத்துவமனையில் உடல்நலன் பாதிக்கப்படவரைப் போலவே டிடிஎப் வாசன் நடந்து கொள்ளவில்லை. மீடியா கேமராவை பார்த்த உடன் எந்த வித குற்ற உணர்ச்சியுமே இல்லாமல் சிரித்த படி போஸ் கொடுத்தார். இதன் உச்சமாக, கையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎப் வாசன், கை கட்டு இல்லாமல் ஜாலியாக போலீசாரை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகளையும் காண நேரிட்டது. டிடிஎப் வாசன், சிறை தண்டனையை அனுபவிக்க பயந்து நாடகமாடுவதாகவே சந்தேகிக்கப்படுவதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+