42 மணி நேரம் தொடர்ந்து தூங்காமல் இருந்த யூடியூபர்.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: "நோ ஸ்லீப் சேலஞ்" என்ற பெயரில் தூங்காமல் இருப்பதற்கான சேலஞ்சை யூடியூபர் மேற்கொண்டார். தொடர்ந்து 42 மணி நேரம் மட்டுமே அவரால் தூங்காமல் இருக்க முடிந்துள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமானது. பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் சரியான தூக்கம் இல்லாததே காரணமாக இருக்கிறது. என்னதான் நாள் முழுக்க முழுக்க ஓடி ஓடி உழைத்தாலும் ஏற்படாத களைப்பு ஒருநாள் தூங்காவிட்டால் வந்து விடும். தூக்கம் சரிவர இல்லாவிட்டால் மாரடைப்பு, ரத்த அழுத்தம் என பல நோய்களும் ஏற்படும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

பலரும் சரியான தூக்கம் வராமல், மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. பயணங்களின் போதோ... அல்லது திருவிழா காலங்களிலோ ஒரு நாள் போதிய அளவு தூங்காவிட்டாலே மறுநாள் முழுக்க உடல் முழுவதும் அசதியாகவும் எப்படா தூங்கலாம் என்ற எண்ணமுமே மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
நோ ஸ்லீப் சேலஞ்: சிறு வயதில் திருவிழா சமயத்தில் கூட நான் இரவு முழுக்க தூங்காமல் இருக்க போகிறேன்.. என பேசிவிட்டு எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் அளவுக்கு காலையில் எழுந்து பார்த்த பிறகுதான் அடடா தூங்கிவிட்டோமோ என்று எண்ணும் அனுபவம் பலருக்கு இருந்து இருக்கும்.. இப்படி எவ்வளவு நேரம் தான் தூங்காமல் இருக்க முடிகிறது என்ற விபரீத எண்ணம் அவ்வப்போது சிலருக்கும் ஏற்படும்.
இப்படியான ஒரு விபரீத ஆசைதான் யூடியூபர் ஒருவருக்கு ஏற்பட்டது. ஜோ பேசர் என்ற யூடியூபர் தனது "நோ ஸ்லீப் சேலஞ்" என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். உடல் நலம் குறித்த வீடியோவை அடிக்கடி பகிர்ந்து வரும் ஜோ பேசர் என்னால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடிகிறது என்று நான் முயற்சித்து பார்க்க போகிறேன் எனக் கூறி வீடியோவையும் பதிவிட்டு இருந்தார்.
மிக மிக சோர்வு ஏற்பட்டது: தனது இந்த முயற்சியின் போது என்ன நடந்தது என்பதையும் விரிவாக வீடியோவில் விளக்கி இருந்தார். அதன்படி, முதல் 18 மணி நேரம் வரை எந்த பிரச்சினையும் இன்றி என்னால் இருக்க முடிந்தது. அதன்பிறகு கொஞ்சம் சோர்வு ஏற்படது. 22 மணி நேரத்திற்கு பிறகு காஃபி ஒன்றை குடித்தேன். சிறிது புத்துணர்ச்சி ஏற்பட்டது. 29 மணி நேரம் கழித்து முற்றிலும் சோர்வு ஆகிவிட்டது.
குளிர்ந்த நீரில் ஒரு குளியலை போட்டேன்.. இது கொஞ்சம் புத்துணர்ச்சியை கொடுத்தது. ஆனாலும் 30 மணி நேரத்தை கடந்ததும் இன்னும் அதிகமாக சோர்வானது. அப்புறம் கொஞ்சம் உடற்பயிற்சி மேற்கொண்டேன். தீவிரமாக செய்யவில்லை... ஆனாலும் அந்த நேரத்தில் கொஞ்சம் சோர்வு போய்விட்டது. 33 மணி நேரம் கழித்து மிக மிக சோர்வு ஆகிவிட்டது. 36 மணி நேரம் கழித்து இரண்டாவது முறையாக காஃபி குடித்த்தேன்..
42 மணி நேரம் மட்டுமே: என்னால் முடிந்த அளவு தூங்காமல் இருக்க முயற்சிசித்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் மெண்டல் பிரேக் எடுக்க வேண்டியாதாகிவிட்டது. என்ன நடந்தது என்பதை யூகித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியே நினைவு இன்றி மயங்கி விழுந்துவிட்டேன். 42 மணி நேரம் மட்டுமே என்னால் தூங்காமல் இருக்க முடிந்தது" என்றார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட ஜோ பேசர் இப்படி யாரும் முயற்சித்து பார்க்க வேண்டாம் என்ற அட்வைஸையும் கொடுத்து விட்டு சென்று இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications