பெசன்ட் நகரில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற வழக்கு! ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மகளுக்கு ஜாமீன்!
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த பெயிண்டர் மீது சொகுசு கார் ஏறியதில் அவர் பலியான சம்பவத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பியின் மகள் கைது செய்யப்பட்டு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). இவர் நேற்று முன் தினம் மதியம் 3 மணியளவில் மதுபோதையில் கலாசேத்ரா காலனிக்கு வந்துள்ளார்.

அங்கு டைகர் வரதாச்சாரி 1ஆவது குறுக்குத் தெரு நடைபாதையில் படுத்து தூங்கினார். அப்போது அதிக போதையில் இருந்ததால் தடுமாறி உருண்டு வந்து சாலையில் விழுந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு சொகுசு கார் அவ்வழியாக வந்தது.
அந்த கார், சூர்யா மீது ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். காரில் இருந்தது இரு பெண்கள் என தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திவிட்டு அவர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றனர். இதனால் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த மக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் சுதாகரின் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதையடுத்து சூர்யாவின் உடலை போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கார் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் பலியான சூர்யா வீட்டில் கோபித்துக் கொண்டு மதுபோதையில் நடைபாதையில் படுத்து உறங்கியது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவின் உறவினர்கள் சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு " விபத்து நடந்த 10 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சிசிடிவி காட்சிகளில் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்கள் இருந்தும் தப்பி ஓடிய பெண்களை ஏன் கைது செய்யவில்லை" என கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சூர்யாவின் உறவினர்களிடம் காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அந்த பெண்கள் கைது செய்யப்படுவர் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காரின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் காரை ஓட்டியது பெசன்ட் நகரை சேர்ந்த பீடா மாதுரி (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவ் என்பவரின் மகள் என தெரியவந்தது. பெசன்ட் நகரில் வசித்து வரும் பீடா மாதுரி, புதுவையில் சொந்தமாக தொழில் நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். காவல் நிலையத்திலேயே அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு விடுதலைச் செய்யப்பட்டார். பிஎம்ஆர் என்ற நிறுவனத்தை மாதுரி நடத்தி வருகிறார், அங்கு கடல் வாழ் உயிரினங்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications