தொண்டர்கள் மோதல்.. ஆந்திராவில் வெடித்த வன்முறை.. சித்தூரில் பந்த்.. தமிழக பயணிகள் தவிப்பு
சென்னை: தெலுங்கு தேசம் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வன்முறையால் சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடப்பதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு நடைபயணத்தின் போது நிகழ்ந்த வன்முறையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் நேற்று சுற்று பயணம் மேற்கொண்டார். அப்போது நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிட சென்றபோது சந்திரபாபு நாயுடுவை ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் இரண்டு கட்சி தொண்டர்களையும் அடித்து விரட்டினர் இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது தொண்டர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல்துறையினர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் இரண்டு கட்சி தொண்டர்களையும் அடித்து விரட்டினர் இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பெண் காவல்துறையினர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு வாகனத்தின் மீது ஏறி ஆவேசமாக உரையாற்றினார். அவரை சூழ்ந்து நின்று சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளித்தனர். இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க காவல்துறையினர் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இதனிடையே மோதல் தொடர்பாக ஆந்திரா சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரா எல்லை பகுதியில் கற்கள், மரங்களை வெட்டிப்போட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் ஆந்திரா இடையே போக்குவரத்தை நிறுத்தப்பட்டுள்ளது. வேலூர் பேருந்து நிலையத்தில் 30 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் இயங்காததால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications