"லவ் ஜிகாத்?".. சென்னை பெண்ணை.. லண்டனில் வைத்து கட்டாய மதமாற்றம்.. சர்ச்சையில் பிரபல மத போதகர்!
சென்னை மாணவியை லண்டனில் இருந்து வங்கதேசத்துக்கு கடத்தி சென்றுள்ளனர்
சென்னை: ராயபுரம் பெண்ணை வங்கதேசத்துக்கு கடத்தி சென்றுவிட்டது ஒரு கும்பல்.. அந்த பெண்ணை மிரட்டி மதமாற்றமும் செய்துள்ளனர்.. இந்த காரியத்தை செய்தது மதபோதகர் என்பதால் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது!
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் அவர்.. இவரது மகள் லண்டனில் உயர் படிப்பிற்காக அங்கு சென்றிருக்கிறார்.
ஆனால், கடந்த மே மாதம் 28-ம் தேதி அந்த பெண்ணை திடீரென காணவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, மகள் மாயமானது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தந்தார்.

தந்தை
இதனால் பதறிப்போன அந்த பெண்ணின் தந்தை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில், உள்துறை அமைச்சகமும் இது சம்பந்தமாக உத்தரவை பிறப்பிக்க, என்ஐஏ ஜூலை 16-ம் தேதி முதல் விசாரணையை ஆரம்பித்தது.. அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பெண்ணை கடத்தியது ஒரு மதபோதகராம்.. வங்கதேசத்தை சேர்ந்தவர்.. பெயர் நபீஸ்.

தந்தை
இதனால் பதறிப்போன அந்த பெண்ணின் தந்தை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில், உள்துறை அமைச்சகமும் இது சம்பந்தமாக உத்தரவை பிறப்பிக்க, என்ஐஏ ஜூலை 16-ம் தேதி முதல் விசாரணையை ஆரம்பித்தது.. அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பெண்ணை கடத்தியது ஒரு மதபோதகராம்.. வங்கதேசத்தை சேர்ந்தவர்.. பெயர் நபீஸ்.

ஜாகிர் நாயக்
ஜாகிர் நாயக் நாயக்குடன் சேர்ந்துதான் ராயபுரம் பெண்ணை லண்டனில் கடத்தி சென்றுள்ளார்.. கடத்தியதுடன் இல்லாமல், பெண்ணை அவரை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இவ்வளவு பெரிய காரியத்தை செய்த அந்த நபீஸ், வங்கதேச அரசியல்வாதி ஒருவரின் மகனாம்.. ஏன் அந்த பெண்ணை கடத்தினார் என்று தெரியவில்லை.

தொழிலதிபர்
ஒருவேளை தொழிலதிபர் வீட்டு பெண் என்பதால், பணம் கறக்க இதை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது... மிரட்டி பணம் பறிப்பது என்றால், எதற்காக மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. அப்படியானால், பாலியல் அடிமையாக மாற்றுவதற்கு இந்த கடத்தல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

லவ் ஜிகாத்
அதுமட்டுமல்ல, இந்த நபீஸுக்கு தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா, இதில் சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக்கின் பங்கு என்ன? அவர் ஏன் இதில் சம்பந்தப்பட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.. ஆனால், இந்த பெண்ணை கடத்திய பின்னணியில் லவ் ஜிகாத் தான் முக்கிய காரணமாக இருப்பதாகவும் குற்றசாட்டு வலுவாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications