சென்னை வேளச்சேரியில் பயங்கரம்.. டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. கற்களை வீசி விரட்டிய பொதுமக்கள்
சென்னை: சென்னை வேளச்சேரியில் செப்டோ டெலிவரி ஊழியரை குடியிருப்புகளுக்கு மத்தியில் வைத்து அரிவாளால் இரண்டு பேர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கொலைவெறியுடன் அரிவாளால் வெட்டியதை பார்த்த பொதுமக்கள், கற்களை வீசி இருவரையும் விரட்டியடித்து டெலிவரி ஊழியரை மீட்டனர்.
சென்னை வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). இவர் Zepto-வில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பார்த்திபன் வேளச்சேரி ஜேஎன் நகர் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்துள்ளனர்.

திடீரென அவரை மறித்து கத்தி, அரிவாளால் இருவரும் கீழே தள்ளி வெட்ட ஆரம்பித்தனர். குடியிருப்புக்கு மத்தியில் வைத்து இருவரும் கை, கால் நெற்றியில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் பார்த்திபன் வேண்டாம் விட்டு விடுங்கள் என கெஞ்சியுள்ளார்.
மேலும் வலியால் அலறி துடித்துள்ளார். இந்த சத்தம் கேட்டதும் குடியிருப்பு வாசிகள் ஒரு சேர ஓடி வந்து கற்கள், கட்டைகளை கொண்டு கத்தி, அரிவாள் வைத்திருந்த நபர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பார்த்திபனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தான் அவர்கள் இருவரும் பார்த்திபனை வெட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இருவரும் அரிவாளால் டெலிவரி ஊழியரை வெட்டியது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வைத்து டெலிவரி ஊழியரை இரண்டு பேர் கீழே தள்ளி நெற்றி, கை, கால்களில் கொடூரமாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications