Arattai-யில் இணைந்த ஆனந்த் மஹிந்திரா.. ஸ்ரீதர் வேம்பு கூறிய வார்த்தை! டவுன்லோட் கிடுகிடு உயர்வு
சென்னை: வாட்ஸ்அப்புக்கு போட்டியாக Arattai எனும் செயலியை ஜோஹோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. தற்போது இந்த செயலியை டவுன்லோட் செய்வோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. மத்திய அமைச்சர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் இந்தியாவின் தயாரிப்பான இந்த அரட்டை செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அரட்டையில் இணைந்துள்ள நிலையில் மீட்டிங்கிற்கு நடுவே ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்தது மற்றும் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தியது உள்ளிட்டவற்றால் நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் சரிவை சந்தித்துள்ளன. அதேபோல் அமெரிக்காவுக்கு எச் 1 பி விசாவில் சென்று பணியாற்ற துடிக்கும் இந்தியர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இந்த இழப்பை சரிசெய்யும் வகையில் உள்நாட்டு பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். உள்நாட்டில் தொழில்கள் தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.
அந்த வகையில் அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பலரும் ‛அரட்டை' (Arattai) செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். வாட்ஸ்அப் என்பது அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்தின் தயாரிப்பாகும். ‛அரட்டை' என்பது தமிழ்நாட்டைதலைமையிடாக கொண்டு செயல்படும் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த செயலியும் வாட்ஸ்அப் போன்றது தான். தனிப்பட்ட முறையிலும், குரூப் தொடங்கியும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். வீடியோ மற்றும் ஆடியோ கால் உள்ளிட்டடவற்றை செய்து கொள்ளலாம். இந்த செயலியின் சிம்பள் ‛அ' என்ற தமிழ் எழுத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது அரட்டை செயலி டவுன்லோட் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 3 ஆயிரம் பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த அரட்டை செயலியை தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள் ‛அரட்டை' செயலியில் இணைய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா , ஜோஹோவின் ‛அரட்டை' செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இன்று அரட்டை செயலியை பெருமையுடன் டவுன்லோட் செய்தேன்'' என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு, ‛‛எங்கள் தென்காசி அலுவலகத்தில் அரட்டை செயலி தொடர்பான இன்ஜினியர்களுடன் மீட்டிங்கில் இருந்தேன். செயலியை மேம்படுத்தும் பணி தொடர்பான மீட்டிங்கின்பாது எனது டீமில் உள்ளவர்கள் இந்த பதிவை காண்பித்தனர். நன்றி ஆனந்த் மஹிந்திரா. இது எங்களுக்கு இன்னும் உறுதியான நம்பிக்கையை தருகிறது'' என பதிவிட்டுள்ளார்.
தற்போது அரட்டை செயலியில் சில இடையூறுகள் உள்ளன. திடீரென்று அதிகமானவர்கள் பயன்படுத்த தொடங்கி உள்ளதால் சர்வரில் பிரச்சனை உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவ்வப்போது சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை சரிசெய்து மேம்படுத்தும் பணியில் ஜோஹோ இன்ஜினியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இந்தஜோஹோ செயலி கடந்த 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை அதனை குறைவானவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது டவுன்லோட் செய்வது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த செயலியில் வாட்ஸ்அப்பை விட கூடுதல் வசதிகள் உள்ளன. வாட்ஸ்அப்பில் எப்படி நாம் தனிப்பட்ட முறையில் ஒருவரிடம் சாட் செய்வது, வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது, போட்டோ, வீடியோக்களை அனுப்புவது, குழுவாக இணைந்து உரையாடுவது, ஆடியோ, வீடியோ கால் பேசுவது உள்ளிட்ட வசதிகள் உள்ளது. அதேபோல் டெஸ்ட்டாப்பிலும் இதனை பயன்படுத்த முடியும். மேலும் ஸ்டோரிஸ் பகிர்வது, சேனல்கள் தொடங்குவது உள்ளிட்டவற்றுக்கும் இந்த செயலி வாய்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications