வாட்ஸ்அப் வதந்தி.. வாயை கொடுத்து.. மாட்டிக்கொண்ட சோஹோ ஸ்ரீதர் வேம்பு.. திமுக சரமாரி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை; கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு செய்துள்ள போஸ்டிற்கு திமுக சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

kallakurichi mk stalin illicit liquor

அதிர்ச்சி அளித்த மரணம்: கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 50 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சோஹோ ஸ்ரீதர் வேம்பு; கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு செய்துள்ள போஸ்டில், கள்ளக்குறிச்சியில் மது அருந்தியதால் ஏற்பட்ட சோகம் ஒரு முக்கியமான விஷயத்தை விளக்குகிறது.

தமிழ்நாட்டின் வரி வருவாயின் முக்கிய ஆதாரமாக மது உள்ளது. அதாவது ஆல்கஹால் அதன் உற்பத்திச் செலவில் இருந்து பெருமளவில் உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தூய எத்தனாலுக்குபதில் தண்ணீர் மற்றும் பல்வேறு சுவைகள் கொண்ட திரவங்கள் கலக்கப்பட்டு அரசாங்கத்தால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

kallakurichi mk stalin illicit liquor

இந்த மிக அதிக லாபம் வைத்து விற்கப்படுகிறது. இது அரசியல் ஊழலின் மிகப்பெரிய ஆதாரமாகவும், கொள்ளை சந்தைக்கு ஊக்கமாகவும் அமைகிறது. பல வாடிக்கையாளர்கள் கடும் வறுமையில் உள்ளனர் என்பதன் அர்த்தம், எத்தனாலை விலைக்கு வாங்குவது அல்லது தயாரித்து, தண்ணீருடன் கலந்து, அரசாங்க விலைக்கு விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலைக்கு உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

நீங்கள் கச்சா எந்திரத்தைக் கொண்டு எத்தனாலைத் தயாரிக்க முயலும்போது, ​​துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் மெத்தனால் கிடைக்கும், அது கொல்லும் திறன் கொண்டது

மதுவிலக்கு மட்டுமே இதுபோன்ற கொள்ளைச் சோகங்களை ஏற்படுத்துகிறது என்று நினைக்கும் மக்கள், அரசாங்கம் மதுப் பணத்தை அதிகமாகச் சார்ந்து இருப்பது கூட.. நாம் கொள்ளையடிக்கப்படவும், இப்படிப்பட்ட அவலங்கள் ஏற்படவும் காரணம் என்பதை புரிந்து கொள்வது இல்லை.

இது போன்ற கொள்ளைச் சந்தையைத் தடுக்க நமக்கு எப்படியும் ஒரு வலுவான தடைப் பிரிவு தேவை. கள்ளக்குறிச்சி சோகம் மதுவிலக்கு அமலாக்கத்துறையின்வெளிப்படையான தோல்வியாகும்.

அப்படி இருக்கையில், ஏன் அதை நன்றாக அமல்படுத்தி, முழுவதுமாக மதுவிலக்கை இலக்காகக் கொள்ளக்கூடாது? இது மிகவும் தேவையான கொள்கையாகும், இதன் மூலம் நமது மாநிலத்தில் ஏழ்மையான பிராந்தியங்களில் உள்ள நமது ஏழை சக குடிமக்களுக்கு உடனடியாக உதவ முடியும். தமிழகத்தில் மதுவிலக்கு ஒரு தார்மீகக் தேவை, என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

பதிலடி: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு செய்துள்ள போஸ்டிற்கு திமுக சார்பாக பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் செய்துள்ள போஸ்டில், பரிதாபகரமான பொய்யர்கள் இவர்கள் எல்லாம். மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், கள்ளச்சாராய சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. குஜராத்தில் தடையை நீக்க பாஜக மற்றும் மோடிஜிக்கு இதே அறிவுரையை நீங்கள் ஏன் கொடுக்கக்கூடாது, இதனால் இறப்புகள் குறையும்.

TASMAC தான் தமிழ்நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரம் என்ற வாட்ஸ்அப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள். பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் ஆகியவை தமிழகத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாகும், என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.;

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+