Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடித்து ஆடும் கூகுள்.. வாட்ஸ் ஆப் ஓவர்.. தற்போது கூகுள் பேவிற்கும் செக்.. வருகிறது Zoho Pay!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட மென்பொருள் சேவை நிறுவனமான Zoho, தொழில்நுட்பச் சேவைகளில் தனது தடத்தை விரிவுபடுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, 'Zoho Pay' என்ற புதிய நுகர்வோர் கட்டணச் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இது அரட்டை (Arattai) தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. இது தவிர, புதிய POS சாதனங்கள் மற்றும் நிதி மென்பொருள் சேவைகளையும் Zoho அறிமுகப்படுத்தவுள்ளது.

அக்டோபர் 22, 2025 அன்று, Zoho Pay தனியாக ஒரு செயலியாகவும், அரட்டை அரட்டைத் தளத்திலும் ஒருங்கிணைக்கப்பட்டும் வெளியாகும். இதன் மூலம் Google Pay மற்றும் PhonePe போன்ற நிறுவனங்களுடன் Zoho போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

zoho

Google Pay மற்றும் PhonePeக்கு போட்டி

Zoho Payments Tech நிறுவனத்தின் CEO சிவராமகிருஷ்ணன் ஈஸ்வரன் இது குறித்துப் பேசுகையில், "Zoho Pay, பயனர்களுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்யவும், பாதுகாப்பான கட்டணங்களைச் செலுத்தவும், தடையில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் உதவும்" என்று தெரிவித்தார். இந்த நடவடிக்கை, Zoho ஏற்கனவே வணிகக் கட்டணங்கள் மற்றும் POS தீர்வுகளை வழங்கி வரும் நிதி தொழில்நுட்பத் துறையில், நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்வரன் மேலும் கூறுகையில், "Zoho Pay ஒரு சீரான, பாதுகாப்பான, மற்றும் ஒருங்கிணைந்த கட்டண அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனி செயலியாகவும் கிடைக்கும், அரட்டைக்குள்ளும் கிடைக்கும், இதன் மூலம் பயனர்கள் தங்கள் அரட்டை இடைமுகத்தை விட்டு வெளியேறாமல் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்" என்றார்.

கடந்த ஓராண்டில், மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள், பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட, தேசிய தகவலியல் மையத்தின் (NIC) அமைப்பிலிருந்து, தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் வேர்ட் கோப்புகள், PDF ஆவணங்கள் மற்றும் powerpoint உருவாக்க ஓப்பன் சோர்ஸ் செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, ஸோஹோவின் செயலி தொகுப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Zoho மெயில்

பல அரசு ஊழியர்கள் ஓப்பன் சோர்ஸ் கருவிகளைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது, இது கோப்புகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். அரசின் தகவல்கள் கசியும் வாய்ப்புகள் ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தற்போது ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 3 அன்று, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டது. அதில் அரசு அதிகாரிகளை ஸோஹோ தொகுப்பைப் பயன்படுத்த வலியுறுத்தியது. இந்தியாவை ஒரு சேவைப் பொருளாதாரத்திலிருந்து ஒரு தயாரிப்பு நாடாக மாற்றும் இந்திய அரசின் பரந்த தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தொழில்நுட்பம், வன்பொருள் மற்றும் மென்பொருள் சேவைகளில், உற்பத்திகளில் முன்னிலை வகிக்கும் Zoho தயாரிப்புகளை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

ஸோஹோ அலுவலகத் தொகுப்பு ஏற்கனவே என்ஐசி மின்னஞ்சல் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. மின்னஞ்சல் டொமைன் பெயர்களான nic.in அல்லது gov.in மாறாமல் இருப்பதாகவும், ஆனால் தரவு சேமித்து செயலாக்கப்படும் ஹோஸ்ட் NIC-ல் இருந்து ஸோஹோவுக்கு மாறியுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. Zoho நிறுவனத்திற்கு 2023-ல் ஏழு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் டந்த ஓராண்டில், மத்திய அரசு ஊழியர்களின் 12 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள், பிரதமர் அலுவலகம் (PMO) உட்பட, தேசிய தகவலியல் மையத்தின் (NIC) அமைப்பிலிருந்து, தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஸோஹோ (Zoho) நிறுவனத்தின் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப பிரிவு

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் 1976-ல் நிறுவப்பட்ட NIC, மத்திய அரசின் தொழில்நுட்ப பிரிவு ஆகும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்குகிறது.

இது தொடர்பாக, பாதுகாப்பு முகமைகளிடமிருந்தும், NIC மற்றும் CERT-In (கணினி அவசரகால மறுமொழி அமைப்பு-இந்தியா) போன்ற அமைப்புகளிடமிருந்தும் அறிக்கைகளைப் பெற்றோம். SQSs (மென்பொருள் தர அமைப்புகள்) ஸோஹோ தளத்தை தொடர்ந்து தணிக்கை செய்கின்றன. தரவுகள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளோம். அதன்பின்பே அவர்களின் தயாரிப்புகளுக்கு மாற முடிவு செய்துள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+