சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்.. சோகத்தில் வடசென்னை மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 259 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

வலுவான மருத்துவ கட்டமைப்பு.. திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதான்.. சாதிக்கும் தமிழகம்வலுவான மருத்துவ கட்டமைப்பு.. திராவிட ஆட்சிகளின் சாதனை இதுதான்.. சாதிக்கும் தமிழகம்

அடையாறு

அடையாறு

அதில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக திருவிக நகரில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேனாம்பேட்டையில் 27 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 24 பேருக்கும், வளசரவாக்கத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அது போல் திருவொற்றியூரில் 3 பேருக்கும், மணலியில் ஒருவருக்கு, அம்பத்தூரில் 6 பேருக்கும், அண்ணாநகரில் 5 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 19 பேருக்கும், அடையாரில் ஒருவருக்கும் கொரோனா பாதித்துள்ளது.

சோளிங்கநல்லூர்

சோளிங்கநல்லூர்

மொத்த எண்ணிக்கை திருவிக நகரில் 259 பேர், ராயபுரத்தில் 216 பேர், தேனாம்பேட்டையில் 132 பேர், கோடம்பாக்கத்தில் 116 பேர், தண்டையார்பேட்டையில் 101 பேர், அண்ணாநகரில் 91 பேர், வளசரவாக்கத்தில் 60 பேர், திருவொற்றியூரில் 19 பேர், மணலியில் 3 பேர், மாதவரத்தில் 4 பேர் அம்பத்தூரில் 33 பேர், ஆலந்தூரில் 9 பேர், அடையாறில் 21 பேர், பெருங்குடியில் 9 பேர், சோளிங்கநல்லூரில் 3 பேர் என ஆனது.

ராயபுரம்

ராயபுரம்

மேற்கொண்ட பட்டியல்களில் முதல் இடத்தில் இருந்த ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியில் நாள்தோறும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளது. பல்வேறு வரலாறுகளை உள்ளடக்கிய வடசென்னை இது போன்று தொற்று நோய் பரவும் மண்டலமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி

டெல்லி

தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று சொல்ல போய் தற்போது கொரோனா தொற்றின் தலைநகராக சென்னை மாறிவிட்டது. இது பெரும் கவலையை அளிக்கிறது. அது போல் டெல்லியும் கொரோனா பரவும் தலைநகராகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம் என சொல்லப்படுகிறது. மேலும் அருகருகே உள்ள வீடுகளால் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் சிலரோ பேசுவதால் என்னவாகிவிட போகிறது என்ற அறியாமையும் உள்ளது. எனவே சென்னையில் இயல்பு நிலை திரும்ப இன்னும் 6 மாத காலம் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

English summary
Here are the list of Coronavirus patients in Chennai zonewise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X