புதுச்சேரியில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு.. இன்று முதல் அமல்! இனி டிக்கெட் எவ்வளவு?
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது. அதன்படி, ரூ.10 முதல் அதிகபட்சம் 30 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உயர்கிறது.
புதுச்சேரியில் திரையரங்கு உரிமையாளர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அண்மையில் அரசுக்கு மனு அளித்தனர். இதனை ஏற்று கட்டண உயர்வுக்கான உத்தரவை புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் பிறப்பித்துள்ளார். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நகர், புறநகர், கிராமப்புறங்களில் என 15க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உள்ளன. தியேட்டர்களின் பராமரிப்பு செலவு அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் எலைட், பால்கனி, டீலக்ஸ் வகுப்புகளுக்கு ரூ.170, பிரீமியம் வகுப்புகளுக்கு ரூ.130 கட்டணமாக நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 160 ரூபாய் என இருந்த பாக்ஸ் டிக்கெட் 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி தியேட்டர்களுக்கு எலைட், பால்கனி, டீலக்ஸ், ரூ.170, முதல் வகுப்பு ரூ.130, 2ம் வகுப்பு ரூ.100, 3ம் வகுப்பு ரூ.60 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று (நவம்பர் 10) முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications