Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் ரயில்.. கையில் சுழலும் பட்டாக்கத்தி.. ரவுடிகளா? கல்லூரி மாணவர்களா? சென்னையில் அத்துமீறல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது.

இதனை பார்க்கும் போது இவர்கள் கல்லூரி மாணவர்களா அல்லது ரவுடிகளா என பொதுமக்கள் அஞ்சும் சூழ்நிலை எழுந்துள்ளது.

பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளாமல், திரைப்படங்களை பார்த்து இவ்வாறெல்லாம் செய்தால்தான் 'கெத்து' என நினைத்துக்கொண்டு மாணவர்கள் செய்யும் சேஷ்டைகளை பார்க்கும் போது ஒருபக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை, காலம் காலமாகவே இரண்டு குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் 'ரூட்டு தல' என்ற பட்டத்தை சூட்டி ஒரு மாணவரை நியமிப்பது வழக்கம். இதுதான் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி ஆகும்.

அடக்கிய போலீஸார்

அடக்கிய போலீஸார்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மாணவர்கள் மோதல், வாரத்திற்கு இரண்டு முறை நடைபெற்று வந்தது. நடுரோட்டில் பட்டாக்கத்தியுன் மாணவர்கள் வெட்டு குத்தில் இறங்கும் வரை இந்த விவகாரம் சென்றது. பின்னர் பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வந்ததால் அரசு இந்த விஷயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, மாணவர்களின் இந்த அராஜகத்தை ஒடுக்கினர்.

பெட்டிப் பாம்பாக அடங்கிய மாணவர்கள்

பெட்டிப் பாம்பாக அடங்கிய மாணவர்கள்

இதுபோல வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை போலீஸார் பிடித்து வைத்து, அவர்களின் பெற்றோரை அழைத்து வந்து 'இனி இதுபோன்ற செயல்களில் எனது மகன் ஈடுபட மாட்டார்' என எழுதிக் கொடுத்துவிட்டு பிள்ளைகளை கூட்டிச் செல்லும் நடைமுறையை போலீஸார் பின்பற்றினர். இதன் காரணமாக, கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது குறைந்திருந்தது. கல்லூரிக்கு வருவதும், செல்வதுமாகவே மாணவர்கள் இருந்தனர்.

 குளிர்விட்ட மாணவர்கள்

குளிர்விட்ட மாணவர்கள்

ஆனால், சமீபகாலமாக போலீஸார், மாணவர்கள் விஷயத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தாததால் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் சென்னையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.

பட்டப்பகலில் நடுரோட்டில் அரிவாள், கத்தியுடன் சண்டை போடும் அளவுக்கு மாணவர்களுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட அண்ணாநகர் ரவுண்டானா அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்னொரு கல்லூரி மாணவர்களை கையில் பட்டாக்கத்தியுடன் விரட்டிச் சென்றனர். இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் அங்கிருந்து சிதறி ஓடினர். இதுதொடர்பாக 2 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

 ரயிலில் அட்டகாசம்

ரயிலில் அட்டகாசம்

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் கூட்டமாக ஏறியுள்ளனர். அப்போது அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டுக் கொண்டும் சென்றனர். அத்துடன் நிற்காமல், அவர்களில் சில மாணவர்கள் கையில் பட்டாக் கத்தியை எடுத்துக் கொண்டு நடைமேடைகளில் உரசியபடி சென்றனர். கல்லூரி மாணவர்களின் இந்த ரவுடித்தனத்தை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

தேடும் போலீஸ்

தேடும் போலீஸ்

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பல பயணிகள் புகார் அளித்தனர். இதன்பேரில், செல்போன் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு இந்த செயலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு 'ரூட்டு தல' மாணவர்களுக்கு கீழ் மற்ற மாணவர்கள் கோஷ்டி கோஷ்டியாக பிரிந்துகொண்டு அவ்வப்போது மோதிக் கொள்வர். சில நேரங்களில் ஒரே கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும், பல நேரங்களில் வெவ்வேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும் இந்த மோதல் சம்பவங்கள் அரங்கேறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+