என்னாது வேளச்சேரி, செம்மஞ்சேரியா! மன்னிப்பு கேளுங்க! குஷ்பு வீட்டை நாளை முற்றுகையிடும் காங்கிரஸ்
சென்னை: பிரச்சினையை ஆரம்பித்து வைத்த நடிகர் மன்சூர் அலிகானே மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில் நீங்கள் கேட்க மறுப்பதேன் என நடிகை குஷ்புவுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறு பேசியதாக கொந்தளிக்கும் குஷ்பு, மணிப்பூரில் இரு பெண்களுக்கு நடந்த கொடூரத்திற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என அவருடைய சமூகவலைதளங்களுக்கு சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதையடுத்து குஷ்பு தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: திடீரென தனது ட்வீட்டில் திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது இதுதான். சாரி! என்னால் உங்களை போல் சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்ணைத் திறந்து பாருங்கள் என தெரிவித்திருந்தார். குஷ்பு தனது பதிவில் சேரி மொழி என பயன்படுத்தியதற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துகிறார் குஷ்பு. இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரின் ஆதங்கங்கள் வலுத்தன. இந்த நிலையில் சேரி மொழி என தான் கூறியதற்கு புதியதொரு விளக்கத்தை குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நான் பயன்படுத்திய மொழி தொடர்பாக கோபமடைந்து வந்த கூட்டத்தை பார்த்தால் எனக்கு காமெடியாக இருக்கிறது. பெண்களுக்கான பிரச்சினைகளின்போது இந்த கூட்டம் மவுனமாகிவிடுகிறது. படிக்காதவர்களுக்கு நான் விளக்கிவிடுகிறேன். என்னுடைய ட்வீட்டை கிண்டலுடன் பதிவிட்டிருந்தேன். சேரி என்பதற்கு பிரெஞ்சு மொழியில் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள். நான் அன்பை பகிர்ந்து கொள்கிறேன் என கிண்டலாக தெரிவித்தேன். இவ்வாறு ட்விட்டரில் விளக்கியிருந்தார்.
சேரி மொழி என ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக பேசிவிட்டு பின்னர் பிரெஞ்ச் மொழியில் சொன்னதாக குஷ்பு சப்பை கட்டு கட்டுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்றைய தினம் குஷ்பு சேரி என தான் யாரையும் இழிவாக பேசவில்லை. அன்பு என்ற அர்த்தத்தில்தான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.பி. பிரிவு தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறந்த நடிகை என்பதை குஷ்பு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்; குஷ்பு மனசாட்சி உள்ள நபராக இருந்தால், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருப்பார்.
இந்தப் பிரச்சினையைத் தொடங்கிய நடிகர் மன்சூரலிகானே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடித்து வைத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து சேரி என்ற வார்த்தை அர்த்தங்களைத் தேடும் வேலையில் குஷ்பூ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்; வேளச்சேரி, செம்மஞ்சேரி என்றெல்லாம் பெயர் இருப்பதாக கூறி மீண்டும் சப்பைக்கட்டு கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்;
மன்னிப்பு கேட்க மறுக்கும் குஷ்புவை கண்டித்து, அவர் வீட்டின் முன்பு திங்கட்கிழமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி..எஸ்டி.. பிரிவின் சார்பில் எனது தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications