காஷ்மீர் பயங்கரவாத அட்டாக் பற்றி 3 நாளுக்கு முன்பே மோடிக்கு தெரியும்.. கார்கே பரபர குற்றச்சாட்டு!
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு உளவுத்துறை அறிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து தான் பிரதமர் நரேந்திர மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உளவுத்துறை தோல்வியை மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகவும், மக்களைப் பாதுகாக்க காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தாததற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கார்கே கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவியவர்களையும் தேடும் பணியில் இந்திய ராணுவ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத சம்பவங்களை ஒடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தக தடையை அமல் படுத்தி உள்ளது நமது அரசு. போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் நாட்டின் பல பகுதிகளில் போர் ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த 'சம்விதான் பச்சாவ்' பேரணியில் உரையாற்றிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே , ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கையாண்ட விதம் குறித்து மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என்ற உளவுத்துறை தகவல் இருந்தும் அரசாங்கம் ஏன் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
"பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடிக்கு ஒரு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது, அதனால்தான் மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உங்கள் பாதுகாப்புக்காக அங்கு செல்வது முறையல்ல என்று ஒரு உளவுத்துறை அறிக்கை கூறும்போது, மக்களைப் பாதுகாக்க உங்கள் பாதுகாப்புத்துறை, உளவுத்துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் எல்லைப் படைக்கு ஏன் தெரிவிக்கவில்லை?
தகவல் கிடைத்ததும், உங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்தீர்கள், ஆனால் சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க கூடுதல் படைகளை அங்கு அனுப்பவில்லை. தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல்கள் இருந்தபோதும், அரசாங்கம் ஏன் எதுவும் செய்யவில்லை" என்று கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நமது அரசாங்கம் எடுக்கும் வலுவான முடிவுகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் அரசாங்கத்துடன் நிற்போம் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். ஏனெனில் இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம். நாடு தான் முதலில். மற்ற அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். இந்த தேசத்திற்காக நாங்கள் தியாகங்களைச் செய்துள்ளோம்," என்று கூறினார் கார்கே.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications