இதய நோயால் துடிக்கும்.. உயிருக்கு போராடும் 10 மாத பிஞ்சி குழந்தை! காப்பாற்ற உடனே உதவுங்கள்!
சென்னை: பிறந்து 10 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை இமானுவேல் மைக்கேல், தற்போது உயிருக்கு போராடி வருகிறார். குழந்தையின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்.
குழந்தை இமானுவேல் பிறந்த மூன்று நாட்களில், பிறவி இதய கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், தொடர் கண்காணிப்பில் வைத்து வளர்க்கப்பட்ட இமானுவேல், ஓரளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால், கடந்த சில நாட்களாக இமானுவேலால் சரியாக மூச்சுவிட முடியவில்லை. தொடர் அழுகை, உணவு சாப்பிட மறுப்பது, காய்ச்சல் என அவதிப்பட்டிருக்கிறார். என்னென்னவோ கை வைத்தியம் செய்து பார்த்தாகிவிட்டது. ஆனால், எதுவும் பலன் அளிக்கவில்லை.

இமானுவேலின் தந்தை ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் அவருக்கு மாதம் வெறும் பத்தாயிரம் மட்டுமே சம்பளம். இம்மானுவேலின் தாய் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக இமானுவேலின் உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து மியாட் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

சோதனையில் இமானுவேலின் இதய கோளாறு தீவிரமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை செய்யவில்லை எனில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட வாய்ப்பு இருக்கிறது. அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள் என மொத்தம் ரூ.2 லட்சம் வரை வருகிறது. சாமானியர்களான இமானுவேலின் பெற்றோர்களால் இந்த தொகையை திரட்ட முடியவில்லை. எனவே, உங்களால் முடிந்த உதவி அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றிட உதவுங்கள். சிறிய உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே இன்றே உதவுங்கள்.













Click it and Unblock the Notifications