Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரூமில் ஒரே அக்கப்போர்.. விழித்த காதலன்.. கிச்சனுக்கு ஓடிய பெண்.. "நுரையீரலே" வெளியே வந்துடுச்சாமே

காதலனை கத்தியால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறு, இறுதியில் ஜெயில் வரை கொண்டு வந்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது?

கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவிற்கு வந்துகொண்டு இருந்த விமானத்தில், சங்கர் மிஸ்ரா என்பவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார்.

அவர் அப்போது மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பயணி, இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தினரிடம் புகார் அளித்தார்.

 தூக்கிய அதிகாரிகள்

தூக்கிய அதிகாரிகள்

ஆனாலும், அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஏர் இந்தியா இயக்குநருக்கு கடிதம் எழுதியிருந்தார்..
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சங்கர் மிஸ்ராவை கைது செய்தனர்... பிறகு, அமெரிக்காவில் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்தும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.. நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுகொள்வதாக ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரியும் தெரிவித்திருந்தார்..

 லிவிங் டூ கெதர்

லிவிங் டூ கெதர்

அதேபோல, அந்த விமானியும், விமானத்திலிருந்த 4 பணியாளர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.. எனினும், கைதான சங்கர் மிஸ்ரா, தன்மீதான குற்றத்தை மறுத்து வருகிறார் என்றாலும் இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. லூசியானா மாகாணத்தின் ஈஸ்ட் படேன் ரோக் பகுதியில் வசிப்பவர் பிரியானா லாகோஸ்ட். 25 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வருகிறார்.. 2 வருட காதல் இது..

பெட்ரூம்

பெட்ரூம்

பிறகு திடீரென 2 பேருக்கும் சண்டை வந்துவிட்டது.. கருத்து வேறுபாடுகள் காரணமாக, 2 பேருமே பிரேக் அப் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்கள்.. கடந்த வாரம்தான் இந்த முடிவை எடுத்தனர். ஒருவருக்கொருவர் நிரந்தரமாக பிரிய போவதால், அதற்கு முன்பாக, ஹோட்டலில் ஒரு பார்ட்டி தருவது என்று ஆசைப்பட்டனர்.. இதற்காக, ஜனவரி 13ம் தேதி நாள் குறித்தனர்.. அன்றைய தினம் காதலர்கள் 2 பேரும் வெளியே சென்றார்கள்.. ஒன்றாக தண்ணி அடித்துவிட்டு, வீடு திரும்பியுள்ளனர்...

 ஒரே படுக்கை

ஒரே படுக்கை

2 பேருமே ஒன்றாக, ஒரே படுக்கையில் படுத்து தூங்கிவிட்டார்கள்.. காலையில் விழித்து பார்த்தபோது காதலி பிரியானா கடுமையாக அதிர்ச்சி அடைந்தார்.. காரணம், போதையில் தூங்கிக்கொண்டிருந்த அந்த காதலன், அந்த படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிட்டாராம்.
இதை பார்த்ததுமே ஆத்திரம் தாங்காத அந்த பெண், தூங்கி கொண்டிருந்த காதலனை சரமாரியாக அடிக்க துவங்கிவிட்டார்.. கண்விழித்த அந்த இளைஞர், நடந்தது என்ன என்றுகூட தெரியாமல், தூக்க கலக்கத்திலேயே அடிவாங்கி கொண்டு, அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினார்.. அந்த பெண் அப்போதும் விடவில்லை..

 நுரையீரல்

நுரையீரல்

கிச்சனுக்குள் நுழைந்து கத்தியை எடுத்து கொண்டு, இளைஞரை விரட்டிக் கொண்டே போய், கத்தியால் குத்திவிட்டார்.. இதில், அந்த இளைஞரின் நுரையீரல் படுகாயமடைந்தது.. ரத்தம் கொட்டியது.. அந்த ரத்தத்தை பார்த்ததுமே, காதலி பதறிப்போய்விட்டார்.. உடனே அந்த இளைஞரை கட்டிப்பிடித்து கொண்டு அழுதார்.. உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்து சென்று அனுமதித்தார்.. ஆனால் அதற்குள் போலீசாருக்கு விஷயம் தெரிந்து, விரைந்து வந்து, காதலியை பிரியனாவை கைது செய்து ஜெயிலில் அடைத்து விட்டது.. அவர் மீது கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த இளைஞர் இப்போது எப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+