இன்னைக்கு நேத்தா.. 12 வருசமா நடக்குது! டிரான்பார்மரில் 400 கோடி ஊழலா? அரசு விளக்கத்தை சாடிய அறப்போர்
சென்னை: மின்மாற்றி கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில், அறப்போர் இயக்கம் அதை மோசமான விளக்கம் என்று தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது. மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஜெம் போர்டல்' விலையை எடுத்து ஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது. புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது.
புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக செம்பு மின் சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது.
தி.மு.க. அரசு, எந்த நிலையிலும், முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்காது. ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை. புகாரில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.
மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது. ராஜஸ்தானில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 வருடங்கள் ஆகும்.
எனவே, சமநிலையில் உள்ள விவர குறியீடுகளோடுதான் ஒப்பீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் விலை எந்தவிதத்திலும் அதிகப்படியானதாக இல்லை என்பது தெரிகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விவரக் குறியீடுகள் மற்ற மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகளோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவில் உயர்ந்ததாக உள்ளது.
மின்மாற்றியின் விலையை ஒப்பிடும்போது அதற்கு இணையான திறன் உள்ள மின்மாற்றிக்கான விலையுடன் மட்டுமே ஒப்பீடு செய்ய இயலும். ஆகவே, புகாரில் ஒப்பீடு செய்துள்ளது தவறானதாகும். கொள்முதலிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அறப்போர் இயக்க தலைவர் ஜெயராமன், "டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 400 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக வந்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த விளக்கம் மோசமாக இருந்தது. அறப்போர் இயக்கம் இதற்கு மறுப்பு தெரிவிக்கும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications