ஷாக்! குண்டு வெடிப்பதற்கு சற்று முன்பாக அதிவேகத்தில் பறந்த நீல நிற கார்.. அதிரவைத்த சிசிடிவி காட்சி!
கொச்சி: கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது அங்கு பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். முப்பத்து ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் படையினர் பலரை மீட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் குண்டு வெடிப்பா அல்லது வேறு ஏதேனும் விபத்தா என கேரள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், அப்பகுதியில் IED குண்டின் பாகங்கள் சிதறிக் கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில், இது வெடிகுண்டு தாக்குதல் தான் என்றும், டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த 3 IED வகை குண்டுகள் வெடித்துள்ளதாகவும் கேரள காவல்துறை உறுதி செய்துள்ளது.
கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார் எனக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் கூறியுள்ளார்.
கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமையும் உடனடியாக குறித்து விசாரணையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், களமச்சேரி அருகே கிறிஸ்தவ மத வழிபாட்டுக் கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற அரங்கத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாகப் புறப்பட்டு வெளியே சென்றதை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தின் ஜெகோபா விட்னஸ் பிரிவின் பிரார்த்தனை கூட்ட அரங்கில் ஐஇடி டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வைத்த நபரே அந்தக் காரை ஓட்டிச் சென்று இருக்கலாம், அதனால் தான் கூட்டம் நடைபெறும்போதே அவசரமாக வெளியேறி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிப்பதால், சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நீல நிற காரில் சென்றவர்கள் யார் என போலீசார், இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடமும், பாதுகாவலர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த கார் பற்றிய தகவலை அளித்து எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications