ஆம்லெட் சாப்பிட கோழி முட்டையை உடைச்சா.. OMG வரிசையா என்ன இது.. கண்கள் விரிய, அசந்து போன கேரளா
கொச்சி: நீங்க நான்-வெஜிட்டேரியனா இருந்தா உங்களுக்கு முட்டை ஃபுட் ஐட்டத்தில் எது பிடிக்கும்? கலக்கி, ஆம்லெட், ஆஃப்பாயில்.. இதுல எதுவா வேணும்னாலும் இருக்கட்டும். இதுல எதை சாப்பிடனும்னாலும், முதல்ல நீங்க ஒரு விஷயத்தை செஞ்சே ஆகனும். என்னன்னு கேக்குறீங்களா? முட்டையை உடைக்கனும், பிறகு சமைக்கனும்..!!
Recommended Video
கூல்.. கூல்.. மேட்டருக்கு வருவோம். இப்படித்தான், ஆம்லெட் சாப்பிட ஆசைப்பட்டு முட்டையை உடைத்துள்ளார் ஷிகாபுதீன். கேரள மாநிலம், மலப்புரம் அருகேயுள்ள ஒதுக்குங்கால் என்ற கிராமம்தான் இவரது ஊர்.
முட்டையை உடைத்தது என்னவோ ஷிகாபுதீன். ஆனால் மொத்த ஒதுக்குங்கால் கிராமமே இவர் வீட்டு முன்பாகத்தான் வந்து நின்றது. அங்கதான் மேட்டரே இருக்கு.

பயங்கரமான கலராயிருக்கே
முட்டையை உடைச்சா மஞ்சள் கலரில் கரு இருப்பதுதானே, உலக வழக்கம். ஆனால், இவரது முட்டையோ பயங்கர பச்சைக் கலராக இருந்தது. மிரண்டு போனார் மனுஷன். விஷயம் கேள்விப்பட்டு ஆளாளுக்கு வந்து இதை பொருட்காட்சி போல பார்த்து சென்றனர். அத்தோடு, ஆம்லெட் சாப்பிடும் ஆசையும் போயிடுச்சாம் ஷிகாபுதீனுக்கு.

ஆளை விடுங்க சாமி
பச்சையாக இருக்கும் முட்டையை சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காம போயிருமோ என்ற அச்சத்தால், அதை பயன்படுத்துவதையே விட்டாச்சு. சொந்தமாக பண்ணை வைத்திருந்தும், கடையில் முட்டை வாங்கி சாப்பிடும் நிலைமைக்கு வந்துள்ளார் ஷிகாபுதீன். படிப்படியாக இவர் பண்ணையிலுள்ள எல்லா கோழிகளும் பச்சை கலர் கருவோடு முட்டைபோட ஆரம்பித்துள்ளன. 9 மாதங்களாக இந்த அதிசயம் நடந்தும், வெளியுலகத்திற்கு தெரியவில்லை.

உலகத்திற்கே தெரிஞ்சி போச்சி
ஆனால், சில வாரங்கள் முன்பாக, இந்த முட்டையை படம் எடுத்து அவர் வாட்ஸ்அப்பில் யாருக்கோ அனுப்ப, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது. மலையாள மீடியாக்களிலும் வெளியானது. இதைப் பார்த்து, ஆச்சரியப்பட்ட, கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஷிகாபுதீன் வீட்டுக்கே விசிட் செய்தனர்.

இது என்ன வம்பு
இது என்ன.. விஞ்ஞானத்தோடு வீம்பா விளையாடுதே இந்த கோழிகள். அப்படி என்னதான் இருக்கு விஷயம் என்று ஆய்வு செய்ய தொடங்கினர். அவர்கள் ஆய்வில், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில், விஞ்ஞானிகள் கொண்டு சென்ற பிறகு, அதே கோழிகள் மஞ்சள் கரு முட்டைகளை இடத் தொடங்கியுள்ளன.

கண்டுபிடிச்சிட்டாங்கப்பா
பல்கலைக்கழகத்தின், பறவையின அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர். எஸ்.சங்கரலிங்கம், இதுகுறித்து கூறுகையில், "கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனமே முட்டை கலர் மாறக் காரணம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஏனெனில் இப்போது கோழிகள் மஞ்சள் நிற கருவுடன் முட்டையிட ஆரம்பித்துள்ளன. பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தீவனத்தை மட்டும் சாப்பிட்ட பிறகு இந்த மாற்றம் நடந்துள்ளது" என்றார்.
விஞ்ஞானிகளின் ஆய்வின்போது, கோழிகளின் தோலுக்குக் கீழே உள்ள கொழுப்பு வைப்புகளில் பச்சை நிறமி இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆஹா.. இதுதான் மேட்டரா
ஷிகாபுதீன் வீட்டை சுற்றிலும் உள்ள சித்தாமுட்டி (Sida cordifolia) வகை கீரைகளை, கோழிகள் தீவனமாக உட்கொண்டதால், இதுபோல பச்சை நிறத்தில் கரு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். தீவன முறையை மாற்றிய பிறகு ஷிகாபுதீன் பண்ணையிலுள்ள கோழிகளும் இப்போது மஞ்சள் கருவுடன் முட்டையிட ஆரம்பித்துள்ளனவாம். நல்லா கெளப்புறாங்கப்பா பீதிய.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications