தேவாலய கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ்’ குண்டு.. சிதறிக் கிடந்த IED பாகங்கள்.. டிஜிபி தகவல்!
கொச்சி: கேரள மாநிலம் களமச்சேரியில் தேவாலய கூட்டத்தில், அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்த நிலையில், வெடித்தவை டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த IED குண்டுகள் என்று கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.20 மணி அளவில் இந்த கூட்ட அரங்கில் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். 10 நொடிகளுக்குள் அடுத்தடுத்து 2 முறை வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பலரை மீட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட காவ்துறை அதிகாரிகளுக்கு கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த கேரளா டிஜிபி உத்தரவிட்டுள்ளார். வெடிபொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் அங்கு விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வெடிபொருள் வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். களமச்சேரி வெடிபொருள் வெடிப்பு தொடர்பான நிலவரத்தையும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அமித்ஷா கேட்டறிந்தார்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு டிஜிபி, ஏடிஜிபி கேரளா அமைச்சர்கள் பலர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பும்படி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். களமச்சேரி மருத்துவக் கல்லூரி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கேரளாவில் அமைந்துள்ள தேவாலயத்தில் வெடித்தது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு என்றும், இது வெடிகுண்டு தாக்குதல் என்றும் கண்டறிந்திருப்பதாக கேரள காவல்துறை டிஜிபி ஷேக் தர்வேஸ் தெரிவித்துள்ளார். 2 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு டிஜிபி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். போலீசார், வெடிகுண்டு வெடித்த அரங்கில் இருந்து IED குண்டின் சில பாகங்களை மீட்டுள்ளனர்.
"கேரளாவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு. டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த IED வகை குண்டுகள் 3 முறை அடுத்தடுத்து வெடித்துள்ளன. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது." என கேரள டிஜிபி தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து 3 முறை டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வெடித்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என்றால், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications