கோவை மாணவியின் “தற்கொலை கடிதம்” நினைவிருக்கா? 9 மாத விசாரணையில் திடீர் திருப்பம்! 2 முதியவர்கள் கைது
கோவை: கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கோவை சின்மயா பள்ளி மாணவி வழக்கில் 2 முதியவர்களை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
Recommended Video
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அமைந்து உள்ள சின்மயா தனியார் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த மிதுன் சக்ரவர்த்தி தந்த பாலியல் தொல்லையே இதற்குக் காரணம் என்றும், இதனால் கடந்த 6 மாதமாக மன உளைச்சலில் மாணவி தவித்து வந்ததாகவும் சக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேபோல மாணவி புகார் அளித்த பின்னரும், அலட்சியமாக இருந்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

விரிவான விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கோவை முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தற்கொலை கடிதம்
தற்கொலை செய்துக்கொண்ட மாணவி, உயிரிழக்கும் முன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஆசிரியரின் பெயரையும், வேறு சிலருடைய பெயர்களையும் குறிப்பிட்டு "யாரையும் சும்மா விடக்கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தில் இடம்பெற்ற 2 பேர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

2 முதியவர்கள் கைது
இந்த நிலையில் 9 மாத தீவிர விசாரணைக்கு பிறகு 2 முதியவர்களை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர்கள் சிறுமி வசிக்கும் பகுதியை சேர்ந்த முஹம்மது சுல்தான் (70) மற்றும் மனோராஜ் (58) ஆவார்கள். இருவர் மீதும் போக்சா வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications