கோவையில் பயங்கரம்.. இரு இளைஞர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்.. பதைபதைக்கும் சிசிடிவி!
கோவை: கோவையில் பட்டப்பகலில் அரிவாளால் இளைஞர்களை ஓட ஓட விரட்டிய ஒரு கும்பல் இருவரை கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (23). இவரது நண்பர் நிதிஷ்குமார் (21). இவர் மீது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கு பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று ரஞ்சித் கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து ரஞ்சித் தனது நண்பர்கள் நிதிஷ் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் ராம் நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோவிலம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி, கிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் இரு பைக்குகளில் ரஞ்சித் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்தது. அப்போது ஒரு கட்டத்தில் பைக்கை மடக்கி ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் நிதிஷ் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது.
அதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ரஞ்சித்தையும் நிதிஷையும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் ரஞ்சித் பலத்த காயமடைந்தார். அது போல் நிதிஷ் லேசான காயமடைந்தார். இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நடந்த போது தப்பியோடிய ரஞ்சித்தின் நண்பர் கார்த்திக்கிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். மேலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரு தரப்பும் முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் ரஞ்சித், நிதிஷ் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் தாக்குதல் நடந்த பகுதியில் பொதுமக்கள நடமாட்டம் இருக்கிறது. அப்போதுதான் இந்த மர்மகும்பல் ரஞ்சித்தையும் நிதிஷையும் வாகனத்தில் இருந்து கீழே விழ வைத்து தாக்குதல் நடத்தியது.
அந்த கும்பலில் இருந்து தப்பியோடிய ரஞ்சித் அல்லது நிதிஷில் ஒருவர் கார் பின்பு மறைகிறார். அப்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் அரிவாளுடன் காரின் பின்புறத்தில் உள்ள மரத்தில் ஒளிகிறார். இதையடுத்து காரின் பின்புறம் மறைந்த நபர் மெதுவாக வெளியே வரும் போது மரத்தின் பின்பு ஒளிந்த நபர் ஓடி வந்து சரமாரியாக வெட்டுகிறார். இதை அங்கிருந்த மக்கள் பார்த்தபடி இருக்கிறார்கள். நெஞ்சை பதை பதைக்கவைக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications