கோவையே கதிகலங்கிப் போச்சு.. கேன் பெட்ரோலால் வந்த விபரீதம்! துடித்து மடிந்த 3 உயிர்கள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திங்கள்கிழமை நள்ளிரவு வாடகை குடியிருப்பில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஒரு கேனில் இருந்து மற்றொரு கேனுக்கு பெட்ரோலை மாற்றும்போது ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திருமூர்த்தி என்பவர் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். அந்த வீட்டில் பெட்ரோல் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் தங்கி இருந்தனர்.

Coimbatore Crime Fire

திங்கட்கிழமை இரவு சுமார் 12 மணி அளவில் அவர்கள் தங்கி இருந்த அறையில் உணவு சமைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது அழகர் ராஜா என்கிற ஓட்டுனர் பெரிய கேனிலிருந்து பெட்ரோலை சிறிய கேனுக்கு மாற்றியுள்ளார்.

அந்த அறையில் சமையல் செய்து கொண்டிருந்த பாண்டீஸ்வரன் சமையலறைக்குள் வராதே என அழகர் ராஜாவிடம் கூறியுள்ளார் . அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ பற்றியது. அந்த அறையில் பெட்ரோல் மற்றும் டீசல் பொருள்களை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தீ பற்றிய உடன் அறை முழுவதும் மள மளவென தீப்பரவியது. இதில் அந்த அறையில் இருந்த ஏழு பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயானது சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் மீது பற்றியதால் அருகில் இருந்தவர்கள் செய்வதறியாத திகைத்து நின்றனர்.

இது பற்றி தகவலை அடுத்து சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எரிந்து கொண்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக அதனை குளிர்வித்து வெளியே எடுத்து வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த மூன்று பேர் அந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் வீட்டுக்குள் சிக்கி உயிரிழந்த மூன்று பேரது உடலை வெளியே கொண்டு வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த சூலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எரிந்து கொண்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பதற்கு முன்பாக அதனை குளிர்வித்து வெளியே எடுத்து வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த மூன்று பேர் அந்த தீ விபத்தினால் ஏற்பட்ட புகையின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு படையினர் வீட்டுக்குள் சிக்கி உயிரிழந்த மூன்று பேரது உடலை வெளியே கொண்டு வந்தனர்.

திங்கட்கிழமை மாலை தான் அழகர்ராஜா ஜாமீனில் வெளிவந்துள்ளார். வெளிவந்தவுடன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது பெரிய கேனில் இருந்து சிறிய கேனுக்கு பெட்ரோலை மாற்றும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அழகர் ராஜா, சின்ன கருப்பு, முத்துகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடமலை குண்டுவைச் சேர்ந்த பெட்ரோல் கண்டைனர் லாரி ஓட்டுநர் தினேஷ், மற்றும் அவரது ஊரைச் சேர்ந்த நண்பரான மனோஜ், வீரமணி ஆகியோர் 90 சதவீத தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து நடந்த போது சமையல் செய்து கொண்டிருந்த பாண்டீஸ்வரன் முகத்தில் லேசான 20% தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்ன கருப்பு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வாகராயம்பாளையத்தில் தங்கி அங்கே பணிபுரிந்து வருவதாகவும் தங்களது நண்பர்களை பார்க்க ஏதாவது ஒரு நாள் இங்கு வந்து செல்வார்கள் எனவும் மற்ற ஐந்து பேரும் ஒரே பகுதியைச் சார்ந்தவர்கள் எனவும் ஐந்து பேரும் பெட்ரோல் ஆயில் டேங்கர் ஓட்டுநர்கள் எனவும் தெரிவித்தனர்.

பாண்டீஸ்வரன் கொடுத்த தகவலின் பெயரிலே அங்கு நடந்த விவரங்கள் தெரியவந்தது. இது பற்றி சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி கோவை மாவட்ட நீதிபதி பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று வாக்குமூலம் பெற்றார். அதில் தற்செயலாக விபத்து நேரிட்டதாகவும் இதில் அந்த அறையில் இருந்த ஏழு பேரும் தீயில் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நேரில் விசாரணை செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட. சூலூர் வட்டாட்சியர் தனசேகர் மற்றும் முத்து கவுண்டன்புதூர் கிராமத்திற்கு உட்பட்ட விஏஓ முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+