உச்சக்கட்ட அலர்ட்.. ஒரே மாசம்தான்.. 3வது அலை வரப்போகுதாம்.. தீவிர கண்காணிப்பில் "கோவை"..!
கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது
கோவை: 3வது கொரோனா பரவல் அலையை எதிர்கொள்ள கோவை மாவட்டம் தயாராகி வருகிறது.. இதையடுத்து சுகாதார ஊழியர்கள் அடுத்தடுத்த பணிகளில் துரிதமாகி உள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் படுமோசமாக தொற்றில் சிக்கி கொண்டிருந்தது.. ஆனால், அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை விதித்ததை அடுத்து, தற்போது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், கோவையில் கொரோனா 3-வது அலையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் எம்.ஏ.சித்திக் இந்த தகவலை செய்தியாளர்களிடமே தெரிவித்திருந்தார்.

எதிர்ப்பு சக்தி
இதற்கு அவர் சொன்ன காரணம், "கோவையில் மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக உள்ளது. அதேசமயம், சென்னையில் கொரோனா எதிர்ப்பு சக்தி 78 சதவீதமாக உள்ளது... கொரோனா எதிர்ப்பு சக்தி 43 சதவீதமாக இருப்பதால், கோவையில் 3-வது அலையால் அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.. அடுத்த ஒரு மாதத்துக்குள் 3-வது அலை வர வாய்ப்புள்ளது" என்றார்.

எச்சரிக்கைகள்
இதையடுத்து, கோவை மக்களும் அலர்ட் ஆகி உள்ளனர்.. தடுப்பூசிகள் அதிகம் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. 3-வது அலை ஒரே மாதத்தில் வர வாய்ப்புள்ளதால், மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அலர்ட் தரப்பட்டுள்ளது.. இதையடுதது, அரசு ஆஸ்பத்திரிகளில் சாதாரண படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன...

சிக்கல்
இந்த தடுப்பூசி பற்றாக்குறையால் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடத்துவதில் சிக்கல் உள்ளது.. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் கிடைக்கும் தடுப்பூசிகளை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மலைகிராமங்களில் உள்ள மக்களுக்கு அளிக்கும் வகையில் தடுப்பூசிகளை பிரித்து அளித்து சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 31 லட்சம் பேர் உள்ளனர்... இவர்களில் கடந்த 8 மாதங்களில் 11 லட்சத்து 89 ஆயிரத்து 396 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

நடவடிக்கை
இதிலும் பலர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை... அதனால், மீதமுள்ள 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளை சுகாதாரத்துறையினர் எடுத்து வருகின்றனர்.,.. தடுப்பூசியின் இருப்பிற்கு ஏற்ப தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், வாய்ப்புள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications