Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது புலியகுளமா அல்லது சாராயக் குளமா? கோவையில் நாம் தமிழர் நிர்வாகிகள் அதிரடி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் ஏராளமான மதுக்கடைகள் உள்ளன. குறிப்பாக கோவை மாநகரின் முக்கியப் பகுதியான புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டருக்கு 4 மதுக்கடைகள் உள்ளதாக புகார்கள் உள்ளது. இந்நிலையில் புலியகுளம் பகுதியில், "இது புலியகுளமா அல்லது சாராயக் குளமா?" என்ற கேள்வியுடன் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை மாநகரை பொறுத்தவரை தொழில் நகரம் ஆகும். இங்கு புதிய மதுக்கடைகள் அமைக்கப்படுவதற்கு எப்போதுமே கடும் எதிர்ப்பு எழுவது வாடிக்கையாக உள்ளது. எங்கே புதிய மதுக்கடைகள் திறந்தாலும், பொதுமக்களும் சரி, அரசியல் கட்சிகளும் சரி போராட்டத்தில் குதிக்கின்றன. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கடையை திறக்கவிடாமல் மூட வைக்கிறார்கள். அப்படியான சம்பவங்கள் கோவையில் அடிக்கடி நடக்கிறது.

4 Tasmac shops per kilometer in puliyankulam at Coimbatore naam tamilar katchi opposes

கோவை ஒண்டிப்புதூர் அருகே புதிதாக திறக்க உள்ள மதுகடைக்கு எதிராக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் தலைமையில் அதிமுக, பாஜக, தவெக மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து அண்மையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் இதுபற்றி கூறும் போது, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர் நகர், பட்டணம் பிரதான சாலை, காமராஜர் நகர், கம்பன் நகர், சாரதி நகர் என இப்பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். ஏற்கனவே 3 அரசு டாஸ்மாக் இங்கு உண்டு .மகளிர் விடுதி, பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக மதுக்கடை திறக்கப்பட உள்ளது. இங்கு மதுக்கடை வந்தால் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராடுகிறோம் என்றார்.

இந்நிலையில் கோவை மாநகரின் முக்கியப் பகுதியான புலியகுளம் பகுதியில், "இது புலியகுளமா அல்லது சாராயக் குளமா?" என்ற கேள்வியுடன் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டி உள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் நான்கு மதுக்கடைகள் இயங்குவதைச் சுட்டிக்காட்டி உள்ள தம்பிகள், இதுதான் நீங்கள் சொல்லும் திராவிட மாடலா ? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். ​இந்த போஸ்டர் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறி உள்ளது.

நேற்றைய தினம் தி.மு.க வினர் 2026 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்து தமிழகத்தில் முட்டை என ஒட்டிய போஸ்டர்களை கிழித்த பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இதைத்தொடர்ந்து பா.ஜ.க வினர் தி.மு.க முட்டை என்றும், தீய சக்தி தி.மு.க வை துடைத்தெறிவோம் என பா.ஜ.க வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

இதனால் கோவை மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல் துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க., பா.ஜ.க வினரிடையே மோதல்கள் உருவாகி சிறைக்குச் சென்ற சம்பவங்களும் அரங்கேறியது, உடனடியாக இதனை தடுக்க சர்ச்சைக்குரிய வாசகங்கள் அடங்கி சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+