நடுவீட்டில் 4 மாதமாக கிடந்த எலும்புக்கூடு... கரிக்கட்டை சடலம்.. நடந்தது என்ன.. பரபர பின்னணி!

என்ஜினியர் எரித்து கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Subscribe to Oneindia Tamil

கோவை: இறந்த சடலம் ஒன்று 4 மாதமாக நடு வீட்டுக்குள்ளேயே கிடந்துள்ளது.. பிணத்தை தீ வைத்து கொளுத்திய வாடையோ, அழுகி போன பிண வாடையோ வராமல்.. ஒரு கொடூர சம்பவம் கோவையில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கரிக்கட்டையாக்கி எரித்து கொன்ற என்ஜினியர் கொலை சம்பவம் குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி சக்திவேல் - அழகு.. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்... பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார் சக்திவேல்.. 42 வயதாகிறது..3 வருஷங்களுக்கு முன்பு கோவைக்கே வந்து வேலை பார்த்தார் சக்திவேல்.

இவர் கோவை வந்ததில் இருந்தே மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்து கொண்டே இருந்தது. இதனால் மனைவியை பிரிந்து தனியாக வந்து விட்டார்.. சொந்த பந்தங்களை வெறுத்தார்... யாருடனும் பேசாமல் ஒதுங்கியே இருந்தநிலையில், தன் அக்காவிடம் மட்டும் அடிக்கடி போன் பேசுவார்.

மாமா

மாமா

ஆனால் 6 மாசமாக அக்காவுக்கு போனும் பண்ணவில்லை.. இதனால் தம்பிக்கு என்ன ஆனதோ என்று பயந்து, அவர் தன் மகன் தினேஷை கோவை அனுப்பி வைத்து, என்ன ஏதென்று பார்க்க சொன்னார். தினேஷ் சக்திவேல் வீட்டுக்கு வந்து "மாமா, மாமா எங்க இருக்கீங்க மாமா" என்று தேடியபோதுதான், சக்திவேல் தீயில் எரிந்து கருகி எலும்புக்கூடாக கிடந்ததை பார்த்து கதறினார்.

கொலை

கொலை

உடனடியாக குனியமுத்தூர் போலீசில் புகார் தரப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது.. எப்படியும் இவர் இறந்து 4 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்கிறார்கள்.. கை, காலை கட்டிபோட்டு எரித்துள்ளனராம்.. கோணிப்பை, தேங்காய் சிரட்டைகள், காகிதங்களை சடலத்தின் மீது கொட்டி, அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர். ஆள் அடையாளமே தெரியவில்லை.. சடலத்தில் கிடந்த ருத்ராட்சை கொட்டையை வைத்துதான் இறந்தது சக்திவேல் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர்.

கொலையாளிகள்

கொலையாளிகள்

இதையடுத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.. வீட்டு பக்கத்தில் வசித்து வந்த இளம்பெண்ணுடன் சக்திவேலுக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.. இதை அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார்.. ஆனாலும் கள்ளக்காதல் நீடித்து வந்துள்ள நிலையில்தான் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சடலம்

சடலம்

இதைதவிர, பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு பிரச்சனை உள்ளதால், அது சம்பந்தமான கொலையாக கூட இது இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. இப்போதைக்கு போஸ்ட் மார்ட்டம் முடிந்துள்ளது.. சடலத்தில் இருந்து சதையை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

4 மாசமாக வீட்டிற்குள் ஒரு பிணம் கிடந்துள்ளது..சடலத்தை எரித்த வாடையும் வெளியே வரவில்லை.. அழுகி போன பிணவாடையும் வெளியே வரகாணோம்.. எப்பவுமே சக்திவேல் வீட்டில் புழக்கம் இல்லாததால், வீடு சுத்தமாக இருக்காதாம்.. ஒருவித வாடை வந்துகொண்டே இருப்பதால், பிண வாடைகூட அக்கம்பக்கத்தினருக்கு தெரியாமல் போயிற்று என்கிறார்களாம்.. கூடிய சீக்கரம் சக்திவேலை எரித்து கொன்ற கொலையாளியை பிடித்துவிடுவோம் என்கிறார்கள் போலீசார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+